name='description'/> தமிழ்க்கனி: போகித் திருநாளும் புரிந்துகொள்ளா மக்களும் !
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

வியாழன், 21 ஜனவரி, 2021

போகித் திருநாளும் புரிந்துகொள்ளா மக்களும் !

 

 

போகித் திருவிழா, நாம் போக்க வேண்டியவை எவை ?


போகித்திருவிழா , போகிப் பண்டிகை ,

சங்கராந்தி என்றெல்லாம் கூறப்படும்

இந்த நாளின் அடிப்படைக் கூறுகள் எவை?

,,,,,,,,,,,,,,,,,,,,

 

 

+தமிழ் மார்கழி மாதம் கடைசி நாள்

தமிழ் நாட்டில் #போகிப் #பண்டிகை

என்று அழைக்கப்படுகிறது.

 

 

+மறுநாள் பிறக்கும்

#தைத்திருநாள்

தூய்மையானதாகக்

கருதி புது வாழ்வைத்துவங்க

வேண்டும்.

 

 

+எனவே , பழையன கழித்து

புதியனவற்றை வரவேற்க

வேண்டும் என்பதற்காகப்

போகி பண்டிகை

கொண்டாடப்படுகிறது

என்று கூறப்படுகிறது.

 

 

+இதற்கு நன்னூல் எனும் இலக்கண

நூலின் கடைசி சூத்திரமான,

"#பழையனகழிதலும் ,

#புதியனபுகுதலும் #வழுவல

#காலவகையினானே

( சூத்திரம் எண்:462) "

எடுத்துக் காட்டப்படுகிறது.

 

 

+ இல்லத்திலுள்ள முதியவர்களும் ,

"மார்கழி பீடை மாதம்.

அந்த மாதத்தின்

கடைசி நாளில் வீட்டில் உள்ள

பயன்படாத , பழைபொருட்களை

அனலிலிட்டுப் பொசுக்கி அழித்து ,

பீடையை விரட்ட வேண்டும்" என்று

கூறுவர்.

 

 

+அன்றைய நாளில் வீட்டையும் ,

தூய்மைப்படுத்த வேண்டும்

என்றும் அறிவுறுத்துவர்.

 

 

+வீடுசுத்தமாக்கப்பட வேண்டும் ,

என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

+ஆனால் , வீட்டில் உள்ள

பழைய பயன்படாத பொருட்களை

அலைில் இட்டுக் கொளுத்த

வேண்டும் என்பது ஏற்புடையதன்று.

 

 

+ பொதுவாக , மார்கழியில் ,

அதிகாலை வேளையில்

பனியின் தாக்கத்தைப் போக்க ,

சுள்ளிகள். காய்ந்த மட்டைகள்.

பயனற்ற பொருட்கள்

ஆகியவற்றைத் தீயிட்டுக்

#குளிர்காய்தல் நாட்டுப்புறங்களில்

வழக்கமாக நடைபெறுவது இயல்பு.

 

 

மார்கழி நிறைவு நாளிலிருந்து

குளிரின் தாக்கம் குறைகின்ற

காரணத்தால் குளிர்காயச்

சேர்த்து வைத்த சுள்ளிகள்

மட்டைகளை ஒன்று திரட்டிக்

குவித்துத் தீயிட்டுக் கொளுத்தி

மார்கழியைப் "#போகுதி "

என்றுவிடை கொடுப்பது நிகழும்.

+எனவே "#போகுதி"மருவி "#போகி"

என்றானது எனக் கருதப்படுகிறது

 

 

+ எனினும் கொளுத்த எதுவும்

இல்லாத நிலையில் ,

#நெகிழிப்பொருட்கள்

(பிளஸ்டிக்/ Plastic) ஈருருளி மற்றும்

மகிழுந்துகளின் #வள்ளைகள்

(டயர் Tyre) எல்லாம் சேர்த்துக்

கொளுத்திச் சுற்றுச்சூழலை

மாசுபடுத்துவது முற்றிலும்

தவிர்க்கப்பட வேண்டியதல்லவா?

 

 

+ ஆகவே புகையில்லாப்

"போகியைக்" கொண்டாட

வேன்டும் என்பதில்

மாற்றுக்கருத்தில்லை.

 

 

+“கொளுத்துவதற்காக ".நம்மிடம்

பருப்பொருள் எவையும் இல்லாத

நிலையில் ,

முதலில் நமக்குள் மண்டிக் கிடக்கின்ற

#அகந்தையாவது கொளுத்துவோம்.

 

 

+ தீயதைக் கழித்து

நல்லதைச் சேர்ப்போம்

+நல்ல செயலுக்காய்

கைகளை கோப்போம்

+பழைய மூடக் கொள்கைகளைக்

கொளுத்தி

புதியதைப் படைப்போம்

 

 

+புதிய தமிழ்த்" #தைப்புத்தாண்டில்"

நேர்மையை

பின்பற்றி நடப்போம்

+உரிமையை வென்றிட

உண்மையாய் உழைப்போம்

+தீமையை நன்மைத்தீயிட்டு

முற்றிலும் அழிப்போம் .

 

 

நம்மை நாமே மாற்றினால்

நானிலம் மாறிடும்

நலங்கள் யாவும் கிடைத்திடும் .

+ புதிய தைத்திங்களில்

புத்தாடை பூண்டு புத்தரிசிப்

பொங்கலிட்டு. பெற்றோர்

உற்றார் உறவினர்களுடன்

தமிழர் திருநாளைக்

கொண்டாடி மகிழ்வோம்.

 

 

+நல் இதயங்கள்

கொண்டாட

உங்கள்

அனைவருக்கும்

#போகி , #பொங்கல்

வாழ்த்துகள் கூறி

மகிழ்கிறேன்.

 

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம.நடரசன்,

கூடுதல் ஆட்சியர்,

வே.வா..து..பெ..இணையம்,

{தி.பி.2052, சிலை (மார்கழி) 29]

{13-12-2020}

----------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. மனதில் சேர்ந்துள்ள குப்பைகளைப் போக்காமல் வீட்டிலுள்ள பழைய பொருள்களைக் கொளுத்துவதால் பயனில்லை ! தங்கள் இடுகை பாராட்டுக்குரியது ! மிக்க மகிழ்ச்சி !

    பதிலளிநீக்கு