name='description'/> தமிழ்க்கனி: நட்பு
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஜனவரி, 2021

அன்பு இணைய வழி வானொலியில் வை.வேதரெத்தினம் !

 

வாழிய வாழி ! வாழி  ! வளம் பெற நீடு வாழி !


அன்பு வானொலி என்கிற தனியார் வானொலி நிறுவனம், நம் தமிழ்ப் பணிமன்ற ஆட்சியர் வை. #வேதரெத்தினம் குறித்து 1.1.2021 இல் ஒரு சிறப்பு நிகழ்ச்சியினை ஒலிபரப்பிற்று !

 

அதன் ஒலிப்பதிவினைத் தமது புலனப்(WhatsApp )பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் தமிழ்க் கடல், தமிழ்ச்செம்மல், கவிச்செம்மல் வை. வேதரெத்தினம் !

 

அதனை அவரின் புலனப்பக்கத்திற்குக் சென்று கேட்டுச் சுவைக்குமாறு வேண்டுகிறேன் !

 

அதனை நான் முழுமையாகக் கேட்டேன். என் கருத்துரையை அங்கே பதிவு செய்துள்ளேன். அதனை இங்கே பகிர்வுப் பதிவாக அளிக்கிறேன் !

 

முதலில், கவிச்செம்மல் வை.வேதரெத்தினம் அவர்களுக்கு வாழ்த்துகள் !


மொழிச் செம்மலுக்குள் இப்படியொரு கவிச்செம்மலும் இருக்கிறார் என்பதை அறியும்போது பெருவியப்பும், மகிழ்ச்சியும் நெஞ்சைக் குதூகலிக்க வைத்தது !

 

அன்பு வானொலி என்ற தனியார் ஒலிபரப்பு நிறுவனம் நம், தமிழ்க்கடல் வை. வேதரெத்தினம் அவர்களைக் குறித்து பல்வேறு செய்திகளை ஆற்றோட்டமான நடையில் சுவையாகக் கூறிற்று !

 

ஆறு பகுதிகளில் சுமார் 32 நிமிட நேரங்கள் ஒலிபரப்பாயிற்று அந்த நிகழ்ச்சி !

 

அவரது அன்னை தந்தை ஆசிரியர் பற்றியும், அவர் கற்ற கல்வி நிறுவனங்கள் பற்றியும் விளக்கம் கூறப்பட்டது.


தஞ்சைத்தரணியின் மைந்தரான இவர் தஞ்சையின் தவப்புதல்வர் கலைஞருக்கு நெருக்கமானவர் என்ற செய்தியையும் தந்தது வானொலி !

 

1964 முதல் கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார் என்று கூறியதுடன் அவரின்கவிதைகள் பலவற்றையும் ஒலிபரப்புச் செய்தது !

 

(i) தமிழ் மொழிக்குப் புதுப் புதுச் சொற்களைத் தந்து மொழிவளம் சிறக்கச் செய்தவர் !

 

(ii) தமிழ்ச் சான்றோர்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றினை 400 பக்க அளவில் எழுதி வெளியிட்டவர் !

 

(iii) இன்னும் பல தரப்பட்ட கட்டுரைகளைக் கவிதைகளை இலக்கண இலக்கியங்களைப் பற்றியும் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர் என்ற பல அரிய செய்திகள் கூறப்பட்டன !

 

அரசுப் பணியில் இருந்தமை, குடும்ப நிகழ்வுகள்குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சுருக்கமான குறிப்பும் தரப்பட்டது.

 

2015 முதல், தமிழ்ப்பணிமன்றம் என்கிற முகநூல் குழுவினைத் தொடங்கி பல தமிழ் ஆர்வவலர்களை ஊக்குவித்து வருபவர் என்பதையும் குறிப்பிட்டது வானொலி !

 

இடையிடையே இவரின் விருப்பமாகத் தமிழ்ச்சுவை செறிந்த 6 திரைப்படப் பாடல்களையும் ஒலிபரப்புச் செய்து இசைவிருந்தும் அளித்தது அன்பு வானொலி !

 

தமிழ்ச் செம்மல், வை. வேதரெத்தினனாரின் அயராத தமிழ்த்தொண்டு மேலும்  மேலும் தொடர வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன் !

 

சுமார் அரைமணிநேரம் தமிழ்க்கடலில் நீந்தி மகிழ வைத்த அனபு வானொலி நிலையத்தாருக்கு நன்றி !

 

------------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை

சோம. நடராசன்,

[Somanatarajan17@gmail.com ]

கூடுதல் ஆட்சியர்.

வே.வா.ப.து.ஓ.பெ.அ.இணையம்.

{22-01-2021}

------------------------------------------------------------------------------------------------------