name='description'/> தமிழ்க்கனி: பிப்ரவரி 2021
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

புதன், 24 பிப்ரவரி, 2021

எதிர்நாயகன் சகுனி நல்லவனா ? கெட்டவனா ?

மகாபாரதத்தின் மிகமுக்கிய கதாபாத்திரங்களில் ஒன்பதாவதாக இடம்பெறுபவன் சகுனி !

 

எதிர்நாயகன் இவர் என்றாலும் அவனிடமும் சில நற்குணங்கள் இல்லாமற் போகாது என்று கூறத் தோன்றுகிறது.பகடை உருட்டுவதில் பண்பு மாறாதவன் சகுனி அவனிடமிருந்தும் இது போன்ற நற்பண்பு(!?) ஏதேனும் இருந்தால் கற்றுக்கொள்ளலாமே !?

 

சகுனியின் குணம் வெறுப்படையத்தக்கதே என்று பலர் எண்ணினாலும் அவனிடமும் பொறுப்பான ஒன்று இருக்குமல்லவா?

 

முதலில் இவன் இறைப்பற்றாளன் ! இராமாயண இராவணனைப் போன்றே  சகுனியும் சிவனியச்  சிந்தையாளன்தான் !

 

காந்தாரியின் உடன்பிறப்புதான் சகுனி . ஆனால், திருதராஷ்டிரனை, அதுவும், ஓர் அந்தகனை,உடன்பிறந்தாள் மணம் முடித்தபின் இயல்பாகவே தோன்றும் வெறுப்பும், வன்மக்குணமும் காந்தாரி பால் சகுனிக்குத் தோன்றியது . மேலும் ,சகுனிக்குத் தனது சகோதரி காந்தாரியிடம் எப்போதுமே இணக்கமான உறவும் இல்லை !

 

பாரதப் போர் உருவாக முக்கிய காரணமாக எப்படி #கபடவேடதாரி #கிருஷ்ணன் இருந்தானோ அப்படியே #சூதாடிச்_சகுனியும் அந்தப் போர் மூண்டதற்கு முக்கிய காரணியாவான் !

 

சகுனியின் தந்தை சுபலன் உட்பட சகுனியையும் அவனின் உடன் பிறப்புகளையும் காராக்கிரகத்தில் அடைத்துச் சித்திரவதை செய்தனர் கௌரவர்கள் !


அவர்களில் மிஞ்சியவன் சகுனி ஒருவனே ! கௌரவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதை சகுனிக்கு உணர்த்தவே அடையாளம் ஒன்றைச்சுபலன் சகுனியின் உடம்பில் உண்டாக்கினார். சகுனியின் கணுக்காலை உடைத்தார் !

 

சகுனியிடம் சொன்னார். இந்த ஊனம் உனக்கு எங்களின் இறப்பை ஞாபகப்படுத்தும். உன் கடமையை ஞாபகப்படுத்தும். கௌரவர்கள் உன் எதிரிகள்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற உன் கடமையை ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இந்த ஊனம் உனக்கு உணர்த்தும்” !

 

தனது தந்தையின் ஆசைப்படி அவரது உடம்பின் எலும்பு பாகங்களால் செய்யப்பட்ட தாயக்கட்டையைத்தான் சகுனி எப்போதும்பயன் படுத்தி வந்தான். சொன்ன எண் விழுவதற்கு அதுவும் ஒரு காரணம்.


அந்த மந்திர எண்கள் விழக்காரணம் அவர் தன் இளமையில் அனுபவித்த துன்பங்களும் என்றும் கூறலாம் !

 

பீஷ்மரின் தலைமையில் காந்தார நாட்டை முற்றுகையிட்ட ஹஸ்தினாபுரத்தின் படை அங்கிருந்த அத்தனைபேரையும் சிறை பிடித்தது. அதில் சகுனியின் குடும்பத்தார் (அவரின் நூறு சகோதரர்களுடன்) அடக்கம் !

 

அவர்களுக்கு சிறையில் தினம் ஒரு குவளைக் கஞ்சி மட்டும் உணவாக தரப்பட்டது. நொந்துபோன அவர்கள் அனைவரும் ஒரு முடிவெடுத்தனர். யாரேனும் ஒருவர் மட்டும் அந்த உணவைச் சாப்பிட்டு உயிர்வாழ்வது என முடிவெடுத்தனர் !


அத்தனை பேராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவன்தான் சகுனி. பழிவாங்கும் குணம் அப்போதே விதைக்கப்பட்டது கௌவர்களைப் பழிவாங்கும் பொறுப்பும் அவன் தலைமீதே விழுந்தது !

 

உடனிருந்தே பழிவாங்கும் உத்தியைக் கையாள வேண்டிய கட்டாயத்தில் சகுனி வளர்ந்தான். கௌரவர்களின் நண்பனாய் தன்னை காட்டிக் கொண்டே தன் பழிவாங்கும் படலத்தை அரங்கேற்றினான் சகுனி !

 

பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தத்தில் அவமானப் படுத்தப்பட்ட துரியோதனன் மனமுடைந்து போயிருந்தான், பொறாமைத் தீயும், தாழ்வு மனப்பான்மையும் அவனுக்குள் நிரம்பி வழிந்தது. துரியோதனனின் உள்ள ஓட்டத்தை அறிந்த சகுனி தனது திட்டத்தை அவனிடம் தெரிவித்தான் !

 

"அறத்தின் நாயகன் தருமரிடம் ஒரு பலவீனமுள்ளது, அவருக்கு சூதாட்டம் மிகவும் விருப்பம். அவரை சூதாட்டத்தற்கு அழையுங்கள், மோசமான ஆட்டம் ஆடுபவராக இருந்தாலும் ஒரு சத்திரியன் சூதாட முடியாது என்று சொல்லமுடியாது"...... !

 

"அப்போது,உனக்குப் பதிலாக நான் ஆடுகிறேன். நான் பகடைக் சூதாட்டத்தில் ஆட்டத்தில் எவ்வளவு கெட்டிக்காரன் என்பது உனக்குத் தெரியும், நான் நினைக்கிறபடி தாயக்கட்டைகளை விழவைக்க முடியும், ஒவ்வொரு வெற்றியின் மூலம் பாண்டவர்கள் வைத்திருக்கும் பொன், மண், பொருள் எல்லாவற்றையும் வென்றுஉனக்குப் பரிசாகத் தருகிறேன்,


நீ இந்திரப்பிரஸ்தத்தின் மன்னனாக முடிசூட்டிக்கொள், பாண்டவர்கள் நாடிழந்து பராரியகி நிற்பார்கள்". என்றான் சகுனி !

 

இதைக் கேட்டதும். துரியோதனன் இரட்டிப்பு மகிழ்ச்சிடைந்தான்.


தான், இந்திரப்பிரஸ்தத்தில் பட்ட அவமானத்திற்குப்பழிக்கும் பழிவாங்குவதுடன் பாண்டவர்கள் அனைவரும் அவமானத்தால் கூனிக்குறு நிற்கப்போகிறார்கள், எறை இரட்டை மகிழச்சி , துரியோதனனுக்கு !

 

ஆனால், உண்மையில், தன் மாமன் தன்னுடைய கொளரவ குலத்தையே அழிக்கப் போகிறான் என்பதை அப்போது துரியோதனன் உணரவில்லை.பாண்டவர்களுடன் சூதாட்டம் தொடங்கியது !

 

ரதங்கள், சேனைகள், யானைகள், குதிரைகள், பணிப்பெண்கள், பணியாட்கள், நாடு என அத்தனையையும் சகுனியால் தருமரிடமிருந்து வெல்ல முடிந்தது !

 

பின்னர் பாண்டவர்களின் மனைவி, திரெளபதையைப் பணயம் வைத்து வென்றால், இழந்த அவ்வளவையும் திரும்பப் பெறலாம் என்றான் சகுனி.


தருமன் சற்றே தயங்கினான்...... !

 

ஆனால், சகுனி தனது சொல்லாற்றலால் பலவும் கூறி, "பந்தயத்தில் ஈடுபட்டபின் அதிலிருந்து பின்வாங்குவது சத்திரியனுக்கு அழகல்ல என்றும் உணர்த்தி, பாஞசாலியைப் பணயம் வைத்துச் சூதாட தருமனை இணங்க வைத்தான் !

 

பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் போன்றவர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், நீதியின் மறு உருவமான, விதுரன்"இந்த விபரீதமான சூதாட்டத்தை நிறுத்துங்கள்" என்றார் !

 

அப்போது, திருதராஷ்டிரன் "நிறுத்தச் சொல்லக்ககூடாது, தருமர் ஒரு சத்திரியன், இந்திரபிரஸ்தத்தின் அரசன்,என்பதால் அவரே முடிவு எடுக்க தகுதியுள்ளவர் "என்றார் !

 

தருமத்தின் வாழ்வைத்தான் சூது கவ்வியே தீரும் அல்லவா,? சூதுகவ்விற்று  சகுனியின் பகடையால். பாண்டவர் நாடிழந்து வெளியேறினர் !

 

12 + 1 ஆண்டு வனவாசம், அஞ்ஞாதவாசம் புரிந்தனர்.....

 

மீண்டும் நாட்டைப்பெறக் "குருச்சேத்திரப் போர்" புரிந்தனர். நாட்டை மீட்டனர்' !

 

ஆனால் ,கெளரவகுலம் அழிய வழிவகுத்து அதைக் கண்ணால் கண்ட சகுனியும் 18 ஆம் நாள் போரில் உயிரிழந்தான் !

 

இலக்கை அடையத் திட்டமிடல், துன்பத்தைத் தாங்குதல்,செயல்படுத்தல், விடாமுயற்சியுடன் கூடிய செயல்திறன் இவை இருந்தால் ஒருவர் தன்னுடைய நோக்கத்தில் வெற்றியடையலாம் என்ற பாடத்தை, சகுனி நமக்கு உணர்த்துகிறான் எனக் கூறினால், அது மிகையாகாது !

 

சகுனி எதிர் நாயகனாக ஆக்கப்பட்டான். நம்மில் பலரும் அவ்வாறே ஆக்கப்படுகிறோம். அதிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளப் போராடி, நம்மை வீழ்த்தியவர்களை வீழ்த்தி, வாழ்வதோ / வீழ்வதோ சரியே, என்பதைச் சகுனியின் பாத்திரம் நமக்கு உணர்த்துகிறது !

 

என்றாலும், "சகுனி நல்லவனா? கெட்டவனா?" நீங்கள் சொல்லுங்கள் என்று  கேட்டால், "நாயகன் வேலு நாயக்கர்" சொன்னது போன்று,"தெரியலையேப்பா !" என்று தான் கூற முடியும் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை



சோம.நடராசன்

{somanatarajan17@gmail.com}

ஆட்சியர்

துலாக்கோல் முகநூல்

[தி.பி.2050: கும்பம் (மாசி) 12]

{24-02-2021}

------------------------------------------------------------------------------------------------------------

 


ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

தத்தித் தாதூதித் தாதூதித் தத்துதி !

"த்காம்"ன்து

சைமைப்பிற்கேரித்தி.

தைத் மிழ்ப்பாட்டாவே மாற்றி

#கவிகாளமேகத்தின் புலமை வியப்பிற்குரியது !

 

இதோ அந்தப் பாடல்:-

தத்தித்தா தூதித் தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

தித்தித்த தித்தத்த தாதெது 

தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது?

 

இதன் பொருள்:

வண்டே, நீ சுற்றிச்சென்று, மகரந்தத்தை

ஊதுகின்றாய்......


மகரந்தத்தை ஊதிய பின்னர்ப் பாய்ந்து செல்கின்றாய்......

"து " "தி" என்று ஒலியெழுப்பி மலர்களை

அணுகுகின்றாய்.....

மிகமிக இனிமையான மலர் எது?

இனிமையுடையது எந்த

மலரினது மகரந்தம்?

அழகான மலர் இதழ் எது?

(கூறுவாயாக).

 

"கொங்குதேர் வாழ்க்கை அரசிறைத் தும்பி...."

என்ற #குறுந்தொகை இறையனார் பாடலின்

தாக்கம் இச் செய்யுளில் இருக்கிறது என்பதும்

ஒப்புநோக்கத்தக்கது !

 

இத்தகைய, புரிந்துகொள்ளக் கடுமையான

பாடலைப் பாடிய கவிகாளமேகம், மிக

எளிமையான பாடலையும் பாடியிருக்கிறார்,

அவற்றுள் ஒன்றினைப் பார்ப்போம் !

 

இவரை, #அதிமதுரகவிராயர் என்பவர்,

"உம் பெயர் யாது

நினைத்த மாத்திரத்தில்

உம்மால் பாக்கள் இயற்ற இயலுமா?" என்று

அங்கதமாகக் கேட்டார் !

 

இதைக்கேட்ட மாத்திரத்தில், காளமேகம்

இந்தப் 

பாடலைப்பாடினாராம் !

 

"இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்

அம்மென்னு முன்னே ஆயிரம்பாட் டாகாதோ - சும்மா

இருந்தால் இருப்பேன் எழுந்தேனே யாயின்

பெருங்கா ளமேகம் பிளாய்"

 

இப்படிப் பாடி அயரவைத்து

விட்டார் என்பார்கள்.

எனவே நினைத்த

மாத்திரத்தில் கவிபாட

வல்ல இவர் #ஆசுகவி என்றும்

போற்றப்பட்டார் !


புரிந்துகொள்ளக் கடினமாக

கவிதையை

யாத்துள்ள இவர் தான்.

மிக எளிதான கவிதையையும்

யாப்பமைதியுடன் எழுதியுள்ளார் !

 

இத்தகைய புலமைமிக்கவர்கள்

தற்போது அருகிவருகிறார்கள்.

புதுக்கவிதை என்ற பெயரில்

வெறும் சொற்சிலம்பமாடும்

#கம்பாசிட்டர் கவிதை இயற்றுபவர்களே

பெருகிவருகின்றனர் !


அவற்றைக் கவிதை நூல்களாகவும்

வெளிக்கொணர்கின்றனர்.

அச்சிட்ட இரண்டு கவிதை

நூல்களை

சான்றாகக் காட்டி,

தங்களின் கட்சிச் சார்புடைமையையும்

பயன்படுத்தி, அதைச்

சாக்கிட்டு தமிழ்நாட்டரசின்

"# #தமிழ்ச்_செம்மல்"

விருதுகளையும் "#வாங்கிவிடுகிறனர்" ?!

 

ஆனால், யாப்புமுறைப்படி

கவிதைகள் யாத்தும் ......

ஏராளமான

புதுப்புதுச்சொற்களைத்

தமிழுக்குத் தந்தும்.....

மெய்யான

தமிழ்ச் செம்மல்களாக

இன்றும்

நம்மையெல்லாம்

மகிழ்வித்துக்கொண்டிருக்கும்

கவிஞர் பெருமக்கள், தமிழறிஞர்

பெருமக்கள்

கவனிக்கப்படாமலே உள்ளனர் !

 

எனினும் அவர்களைப் 

போற்றுவதும்

பாராட்டி மகிழ்விப்பதும் நம் கடமை !

 

----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


 

சோம.நடராசன்

(somanatarajan17@gmail.com)

ஆட்சியர்

”துலாக்கோல்” முகநூல்

[தி.பி.2052: கும்பம் (மாசி) 09]

21-02-2021

----------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை !

 

பொழுது விடிந்ததும் கண்விழிக்க

வேண்டிய பொருட்கள் என்று ஐந்திற(பஞ்சாங்க) ,

கணிய(ஜோதிட) நூல்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளன.

 

அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு

ஒரு பொருள் நாடு, இனம் , மொழி எல்லைகளையெல்லாம் கடந்து

உலக மக்களை ஈர்த்து ஒவ்வொருநாளும்

விடிந்ததும் "என் முகத்தில் விழி"

என முன்னிற்கிறது.

 

அதுதான் #முகநூல் என்கிற

#ஃபேஸ்புக் (#Facebook)

இந்த முகநூல் என்கிற

ஃபேஸ்புக் (Facebook)

தோற்றுவிக்கப்பெற்ற நாள்

#ஃபெப்ரவரி_4_2004

 

முகநூல் (Facebook, ஃபேஸ்புக் ) 2004 இல் தொடங்கிய இணையவழி சமூக

வலையமைப்பு நிறுவனமாகும்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்

பயின்று கொண்டிருந்த மாணவர்

#மார்க்சக்கர்பர்க் ஹார்வர்ட்

மாணவர்களுக்காக

ஆரம்பித்ததுதான் முகநூல் .

 

பின்பு வேறு "ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும்" முகநூலில்

அனுமதி கிடைத்தது. அன்றைய

முகநூலில் 13 வயதான நபர்கள் சேரலாம்.

 

அலெக்சா நிறுவனத்தின்

மதிப்பீட்டின்படி இணைய முழுவதிலும்

முகநூல்தான் இரண்டாவது மிகப்

பரவலமான இணையத்தளமாகும்.

 

#fb. பேஸ்புக்கினை தமிழில்

#முகநூல் என்று அழைக்கின்றார்கள். இவ்வாறு

அழைப்பது பரவலாக ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

பேஸ்புக் அல்லது முகநூல்

என்கிற 2004ல் தொடங்கப்பட்ட

இணையவழி சமூக வலையமைப்பான

இதில் , டிசம்பர்,2020கணக்கெடுப்பின்படி

280 கோடிப்பேர் பயபடுத்துபவர்ளர்களாக

(உபயோகிப்பாளர்கள்) உள்ளனர்.

 

13 வயதிற்கு மேற்பட்டவர்கள்,

சரியான மின்னஞ்சல் முகவரியை

உருவாக்கிக் கொண்டு முகநூலில்

தங்களின் பெயரைப் பதிவு செய்துகொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை

நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள்

கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளத்

தகுதியானவர் ஆவர்.

 

முகநூலை #மார்க் #சக்கர்பர்க்

தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின்,

டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார்.

 

பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு

பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர்.

 

2008ல்,முகநூலின் தலைமையகம்

அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில்

தொடங்கப் பட்டது. 2010ல்,

முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக

உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய

இணையதள நிறுவனமாக உயர்ந்தது.

 

2011ல் முகநூலின் தலைமையகம்

மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு

மாற்றப்பட்டது.

 

இந்தியாவில் இந்திய தகவல் தொழில்

நுட்ப சட்டம் மற்றும் இந்திய ஒப்பந்த

சட்டம் ஆகியவை #18வயதுக்குட்பட்டவர்கள்

பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களில் உறுப்பினராவதை #ஏற்பதில்லை.

இது சிறார் பாதுகாப்பைக் கருத்தில்

கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று.

 

முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்கள், மற்றும் முன்னாள்,இன்னாள் ஊழியர்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த இணையதளத்தின் வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே கிடைக்கிறது.

 

மற்ற பெரிய இணையதளங்களை விட விளம்பரங்களைப் பார்க்கும் கட்டணம்

இதில் குறைவு. ஏனென்றால் இந்த

இணையதளத்தை உபயோகிப்போர்

இளைஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு நண்பர்களுடன் கலந்துரையாடவே

விருப்பம். விளம்பரங்களைப் பார்க்க

அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

 

இணையதள

முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம்.

 

தான் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட

தகவல்களை யாரெல்லாம் அறிந்து

கொண்டார்கள், யாரெல்லாம்

தன்னைப் பற்றிய தகவல்களைத்

தேடினார்கள் என்று அறிந்து

கட்டுப்படுத்தலாம்.

 

இது மை ஸ்பேஸ் (என்னுடைய இடம்)

என்ற இணையதளத்தை

ஒத்து இருந்தாலும், முகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப்படுகிறது.

 

முகநூலில் நண்பர்களுடன் தகவல்

பரிமாறும் சுவர், புகைப்படங்கள்

பதிவு செய்யும் வசதி, நண்பர்களின்

தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றை

குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு.

 

200 புகைப்படங்கள் வரை ஒரு ஆல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு. முகநூல் மூலம் நண்பர்களுக்கு 1 டாலர் செலவில் பரிசுகளை முக்கியத் தகவல்களுடன் அனுப்பலாம்.

 

சுமார் 60 நாடுகளில் உள்ள 280 கோடி

மக்கள் 200 கைபேசி இயக்கிகள் மூலம் நவீனக் கைபேசியில் முகநூல் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

 

ஏப்ரல் 2011ல் முகநூலில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது.

 

ஜூலை 2011ல், #ஸ்கைப் என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர்.

 

இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றது.

2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது.

fb.நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல்

இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

 

2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான

விருதைப் பெற்றுள்ளது.

 

ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளது.

Fb.ஆங்கில மொழி பேசும் கனடா,அமெரிக்கா ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும், வட அமெரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளிலும் முகநூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், துருக்கி, பிரேசில், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் முகநூல் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெறுகின்றன.

 

சீனா, வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்த இணையதளம் இஸ்லாமியத்துக்கு எதிரானது, மத வேற்றுமையை ஏற்படுத்தக்கூடியது என்று தடை செய்துள்ளனர்.

 

50% பிரிட்டிஷ் கம்பெனிகளில் வேலை நேரத்தில் முகநூல் இணையதளம் பார்ப்பதற்கு தடை விதித்துள்ளனர். அழையா விருந்தாளிகளால் சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டதால் ஜெர்மனியில் முகநூலைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 

முகநூலில் 18 வயதுக்குட்பட்ட இளையோர் தங்கள் பதிவுகளை பொதுவெளியில் பகிர்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு அக்டோபர் , 2013 இல் தளர்த்தப்பட்டது.

 

வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர்.

fb.ஒரே எண்ணம்,விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது முகநூல்.

 

பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு.

சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம் சமூகக் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர்.

 

விவாரத்து ,குழந்தைப் பேறு இல்லாமை போன்றவற்றிற்கும் இந்த இணையதளம் காரணமாக இருக்கிறது என்று கருதுவோர் சிலரும், இதை மறுப்பவர் சிலரும் உண்டு.

 

'த சோசியல் நெட்வொர்க்' என்ற பெயரில் முகநூலைப் பற்றிய திரைப்படம் ஒன்றும் வெளி வந்துள்ளது.

fb.முக நூல் பக்கத்தில் சில சமூக விரோதிகளின் தொந்தரவுகளைத் தவிர்க்க என்ற உதவி பக்கத்தை நாடலாம். மற்றும் முக நூல் சம்பந்தமாக புகார் எதுவும் தெரிவிக்க என்ற பக்கத்திற்கு செல்லலாம்.

 

தமக்கு வேண்டாத நட்பை நீக்க ("Unfriend”) என குறிப்பிடலாம். மற்றும் எவரின் செய்தியும் வேண்டாம் என்றால் (block) என்ற விருப்ப பகுதியை கவனத்தில் கொண்டு தடை ஏற்படுத்த முடியும்.

 

ஜனவரி 2008 அமெரிக்க அரசியலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியின் 'நேருக்கு நேர்' கருத்தரங்கை நடத்தியதால் அமெரிக்கத் தேர்தலில் பெரிய மாற்றம் உண்டாக முகநூல் காரணமானது.

 

பிப்ரவரி 2008ல் ' ஒரு மில்லியன் குரல்கள் எப். ஏ. ஆர். சி(FARC)க்கு எதிராக' என்று ஆயிரக்கணக்கான கொலம்பிய மக்களை கொலம்பிய ஆயுதப்புரட்சிப் படைக்கு எதிராக ஒன்று திரட்டியதிலும் முக்கியப் பங்கு வகித்தது முகநூல்.

 

2017 இல் தமிழகத்தில் #ஏறுதழுவுதலுக்குத் (#ஜல்லிக்கட்டு) தடை விதிக்கப்ட்ட போது முகநூல் மூலம் தொடர்பு கொண்டு உலகமே வியக்கும் வண்ணம் வரலாறு காணாத "#மெரினா #புரட்சி" நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

2011 எகிப்திய புரட்சியில் இந்த இணையதளம் முக்கியப் பங்கு வகித்ததால், ஒரு எகிப்தியக் தம்பதியர் தம் குழந்தைக்கு #பேஸ்புக் என்று பெயரிட்டுள்ளனர்.

 

2012 ஆம் வருடம் அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆய்விற்காக, முகநூலின் 700,000 பயனர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே சில குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் பதிவுகள் முகநூல் நிறுவனத்தாலேயே(Facebook) வழங்கப்பட்டு, பயனர்களின் எதிர்வினைகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன.

 

கிட்டத்தட்ட 700,000 பயனர்கள் இவ்வாறு எதிர்மறையான தரவுகள் தந்து பரிசோதிக்கப்பட்டனர்.தரப்படும் தரவுகள் மூலம் முகநூல் பயனர்களைக் தாங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் செயல்பட வைக்க முடிகிறதா என்ற இவ்வாய்வு அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சைன்சஸ் (National Academy of Sciences) நடத்தியது.

 

இந்த வகையான நடவடிக்கை (emotional manipulation) முகநூல் பயனர்களிடையே தங்கள் மனநிலையை உருவாக்கும் கட்டுப்பாடை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பதால் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

 

மொத்த முகநூல் உறுப்பினர்களில் எட்டு கோடி பேர் போலியான பெயர்களில் செயல்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

fb.தமிழகத்தில் சென்னை காவல் துறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மாதத்திற்கு குறைந்தது பத்து புகார்கள் முகநூல் மோசடி தொடர்பானவையாக வருகின்றன.

 

2013 ஆம் ஆண்டு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை விளம்பரத்திற்கு பயன்படுத்தியதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் முகநூல் நிறுவனம் பலருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டிய நிலை வந்தது.

 

பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து அவற்றையெல்லாம் முடிந்ததும் பதினாறு வயதுப் பருவமங்கையாக / கட்டிளங்காளையாக முகநூல் வளர்ந்து விட்டாள்/ விளர்ந்து விட்டான்.

 

உலகம் முழுதும் உள்ள #பதின்மவயது #இளையோர் முதல் #நூறாண்டை எட்டிக் கொண்டிருக்கும் #முதியோர் வரை உள்ள #இருபாலரையும் முகநூல் ஆட்கொண்டு விட்டது.

 

அத்தகைய முக நூலுக்கு பல்லாண்டு கூறி வாழ்த்தி மகிழ்வோம்.

 

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை 


 

சோம.நடராசன்

ஆட்சியர்

துலாக்கோல் முகநூல்

{04-02-2021]

---------------------------------------------------------------------------------------------