name='description'/> தமிழ்க்கனி: விழிப்புமை
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !
விழிப்புமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 ஜூலை, 2021

செந்தமிழை உயிராய்க் கொள்வீர் !

 

                            பாவேந்ரின் சங்நாம் !

                         --------------------------------------------------

                    ஆங்கிலத்தைக் கற்கையிலும்

                                         …..அயல்மொழியைக் கற்கையிலும்

                                         ……….எந்த நாளும்,


                     தீங்கனியைச் செந்தமிழைத்

                                          …..தென்னாட்டின் பொன்னேட்டை

                                           ……….உயிராய்க் கொள்வீர் !


                     ஏங்கவைக்கும் வடமொழியை

                                          …..இந்தியினை எதிர்த்திடுவீர்,

                                           ……….அஞ்ச வேண்டாம் !


                     தீங்குடைய பார்ப்பனரின்

                                          …..ஆயுதங்கள் "இந்தி வட

                                           ……….சொல்" இரண்டும் !


                     தமிழின்பேர் சொல்லி மிகு

                                          …..தமிழரிடைத் தமிழ்நாட்டில்

                                           ……….வாழ்ந்திட் டாலும்,


                     தமிழழித்துத் தமிழர்தமைத்

                                          …..தலைதூக்கா தழித்துவிட

                                           ……….நினைப்பான் பார்ப்பான் !


                     அமுதாகப் பேசிடுவான்

                                           …..அத்தனையும் நஞ்சென்க !

                                           ……….நம்ப வேண்டாம் !


                      தமிழர்கடன் பார்ப்பானைத்

                                            …..தரைமட்டம் ஆக்குவதே

                                             ……….என்றுணர்வீர் !

 

                          ********************************************************

 ஆக்கம் + இடுகை

சோம.நடராசன்,

ஆட்சியர்,

“துலாக்கோல்” முகநூல்,

[தி.ஆ: 2052, ஆடவை (ஆனி) 25]

{09-07-2021}

********************************************************

அனைத்துப் பதவிகளையும் ஆக்கிரமிக்கும் பார்ப்பனர்கள் !

 

 

அனைத்துப் பதவிகளையும் ஆக்கிரமிக்கும் பார்ப்பனர்கள்.

எகனாமிக்_டைம்ஸ் ஏடு_தரும்_எச்சரிக்கை !

 

#பிறப்பின் அடிப்படையில்தான் பார்ப்பனர்கள் உயர் ஜாதி யினர் என்று கருத வேண்டாம் - பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும் பார்ப்பனர்கள் முதலிடத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

  

ஊடகங்கள் பார்ப்பனர்களின் கரங்களில் வசமாகக் சிக்கிக் 

கொண்டிருக்கும் காரணத்தால்

 ஒரு தவறான கருத்தைப் பரப்பி

வைத்துள்ளனர்.

  

அய்யோ பாவம் பார்ப்பனர்கள் ஓட்டல்களில் சர்வராக வேலை பார்க்கிறார்கள். இடஒதுக்கீடு இருப்பதால் அவர்களுக்குப் படிக்கவும், வேலைக்கு போகவும் வாய்ப்பு இல்லாமல் சதி செய்யப்பட்டு விட்டது என்று உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

  

பார்ப்பனர் அல்லாதாரும் இந்த மாயச் சுழலில் சிக்கி தாளம் போடுகிறார்கள்.

  

இந்தப் பொய்த்திரையை கிழிக்கும் வகையில்தான் "எகனாமிக் டைம்ஸ்"

ஏடு (2019 மே 12 - 19) 

ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விவரங்களைத் தந்துள்ளது.

 

பணக்காரர்கள் என்று வரும் பொழுது பார்ப்பனர்கள் 49.9 விழுக்காடாகும். பிற்படுத்தப்பட்டோர் 15.8 விழுக் காடாகும். தாழ்த்தப்பட்டோர் 9.5 விழுக்காடாகும்.

 

உண்மை நிலை இவ்வாறு இருக்க பார்ப்பனர் எல்லாம் பரம ஏழைகள் போல பம்மாத்து பிரச்சாரம் நியாயம்தானா?

  

இதனை நம்பும் பார்ப்பனரல்லாத மக்களின் மனநிலையை என்னவென்று சொல்லுவது !


ஏழை என்று எடுத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் 4.6 விழுக்காடுதான், பிற்படுத்தப்பட்டோரில் ஏழைகள் 18.9 விழுக் காட்டினர் ஆவர். பிற்படுத்தப்பட்டோரில் பார்ப்பனர் களை விட ஏழைகள் அதிகம் என்பதை கவனிக்க வேண்டும்.

 

அதே போலவே தாழ்த்தப்பட்டவர்களில் ஏழைகள் 28.4 விழுக்காடாகும். இவர்களில் பணக்கார்கள் 9.5 விழுக்காடே!

 

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன? ஏழ்மைக்கும், ஜாதிக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளலாம்.

  

அதே போல பார்ப்பனர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்பதற்கான காரணிகளையும் தெரிந்து கொள்ளலாம்.

 

உத்தியோக நிலைமையை எடுத்துக் கொண்டால் கேட்கவே வேண்டாம்.


எஸ்.சி. எஸ்.டி மற்றும் ஓபிசி அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்த இடங்களைக் காண்க:

  

1. குடியரசுத் தலைவர் செயலகத்தின் மொத்த இருக்கைகள்- 49 இவர்களில் 39 பார்ப்பனர்கள் SC, ST - 4 OBC - 6

 

2. குடியரசு துணைத் தலைவர் செயலகத்தின் பதவிகள் 7 இங்கே 7 பதவியிலும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். SC-0 ST- 0 OBC - 0

  

3. கேபினட் செயலாளர் பதவிகள் 20 பார்ப்பனர்கள்- 17 SC, ST-1 OBC - 2

  

4. பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் பார்ப்பனர்கள் - 31 - SC, ST - 2 OBC - 2

 

5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த இருக்கைகள் 274.  பார்ப்பனர்கள் – 259,  SC, ST - 5 OBC - 10

  

6. பாதுகாப்பு அமைச்சகம் 1379.  பார்ப்பனர்கள் 1300.  SC, ST - 48 OBC - 31

  

7. சமுக நல மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மொத்தருக்கைகள் 209. பார்ப்பனர்கள் – 132. SC, ST - 17 OBC - 60

  

8. நிதி அமைச்சின் மொத்த இருக்கைகள் 1008.  பார்ப்பனர்கள்942.  SC, ST - 20 OBC - 46

  

9. பிளானிங் அமைச்சகத்தில் மொத்தம் 409  பதவிகள் பார்ப்பனர்கள் – 327.  SC, ST - 19 OBC - 63

  

10. தொழில் அமைச்சகத்தின் மொத்த இருக்கைகள் 74.  பார்ப்பனர்கள் 59. SC, ST- 4 - OBC - 9

 

11. கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலியம் அமைச்சகத்தின் மொத்த இருக்கைகள் 121.  பார்ப்பனர்கள் 99.  -SC, ST-0 OBC- 22

 

12. ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் 27, ஒட்டு மொத்தம் பார்ப்பனர்கள் – 25.  SC, ST- 0 OBC - 2

 

13. தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140  பதவி. பார்ப்பனர்கள் – 140.  SC, ST - 0 OBC - 0

  

14. மத்திய அரசு பல்கலைக் கழக துணைவேந்தர் 108  பதவி. பார்ப்பனர்கள் 100.  SC, ST- 3 OBC - 5

 

15. மத்திய செயலாளர் பதவிகள் 26.  பார்ப்பனர்கள் – 18.  SC, ST - 1 OBC -7

 

16. உயர்நீதிமன்ற நீதிபதி 330 பதவி.  பார்ப்பனர்கள் – 306.  SC, ST - 4 OBC - 20

  

17. உச்சநீதிமன்ற நீதிபதி 26 பதவி.  பார்ப்பனர்கள் – 23.  SC, ST-1 OBC - 2

  

18. மொத்த அய்.ஏ.எஸ். அதிகாரி 3600 பதவி.  பார்ப்பனர்கள் – 2750.  SC, ST - 300 OBC - 350

 

(டில்லியினை அடிப்படையாகக் கொண்ட , 'யங் இந்தியா' எனப்படும் நிறுவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டில் கிடைத்த தகவல்)

 

இப்படி எல்லா நிலைகளிலும் வலுவாக வளமாக இருக்கும் பார்ப்பனர்கள் எல்லாம் ஏதோ பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று கூறி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்காக பாரதீய ஜனதா என்ற பார்ப்பன ஜனதா அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது

 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தமிழ்நாடு அரசு (அ.தி.மு.க. அரசு)  - அரசனை மிஞ்சிய விசுவாசியாக இதனைச் செயல்படுத்த முண்டா தட்டி எழுகிறது.

 

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இடஒதுக்கீட்டில் பார்ப்பனத் தன்மையோடு செயல்படுவது மன்னிக்கவே முடியாத வெட்கக் கேடாகும்.

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

சோம.நடராசன்,

ஆட்சியர்,

“துலாக்கோல்” முகநூல்.

[தி.ஆ 2052, ஆடவை (ஆனி) 25]

{09-07-2021}

-----------------------------------------------------------------------------------------

வியாழன், 28 ஜனவரி, 2021

புலால் தவிர்ப்போம் ! உடல் நலம் பேணுவோம் !


ஊன் உண்ணுதலைத் 

தவிர்க்க வேண்டும்

என்பதை உடல் நலம் பேணுபவர் 

கடைப்பிடிக்க வேண்டும்


பேராசான் திருவள்ளுவரும் 

இதனை புலான்மறுத்தல் என்கிற 

அதிகாரத்தில் (26) வலிமையாக 

வலியுறுத்தியுள்ளார்


ஆனால், உலக மக்களில், 

புலான்மறுத்தலைக் 

கடைப்பிடிப்பவர்கள் 

மீச்சிறுபான்மையினர்தான்.


எனினும், தற்காலத்தில்

அகவை முதிர்ந்தவர்கள்

செரிமானக்கோளாறு காரணத்தால்,

புலால் உண்ணுதலைக்

கைவிட்டுவிடுகிறார்கள்.

அவர்களை வணங்கி

வாழ்த்துவோம்


இன்று பேரருட்பேரொளி

அருட்பிரகாச வள்ளற்பெருமான்

இறைவனுடன் தம்மை 

ஆட்படுத்திக்கொண்ட

தைப்பூசத் திருநாள்.


பேராசானுக்குப்பின், 

புலான் மறுத்தலை

வலியுறுத்தியவர் 

பேரருட்பேரொளி

வள்ளற்பெருமான் ஆவார்.


இந்நாளில், புலான் மறுத்தலை 

நாம்அனைவரும் கடைப்பிடிப்போம்

என்று உறுதியேற்பதே

வள்ளுவப் பெருந்தகைக்கும்.

வள்ளற்பெருமானுக்கு நாம் செலுத்தும்

பெருநன்றிக் கடனாகும்.


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உலகும் தொழும் .

 #பேராசான்_வள்ளுவர்#


கங்கையிற் படிந்திட்டாலும்

கடவுளைப் பூசித்தாலும்

சங்கையில்லாத ஞான 

சாத்திரம் உணர்ந்திட்டாலும்


*மங்குல்போல் கோடி தானம்

வள்ளலாய் வழங்கிட்டாலும்

பொங்குறு #புலால்_புசிப்போன்

போய் நரகு அவைவன் அன்றோ !

#பேரருட்பேரொளி_வள்ளலார்#

--------------------------------------

* மங்குல் = வானம்

-----------------------------------------------------------------------------------

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை



சோம . நடராசன்

[somanatarajan17@gmail.com ]

ஆட்சியர்

துலாக்கோல் முகநூல்

{தி.பி:2052: சுறவம் (தை)15}

28-01-2021

------------------------------------------------------------------------------------------------------------------






வியாழன், 21 ஜனவரி, 2021

போகித் திருநாளும் புரிந்துகொள்ளா மக்களும் !

 

 

போகித் திருவிழா, நாம் போக்க வேண்டியவை எவை ?


போகித்திருவிழா , போகிப் பண்டிகை ,

சங்கராந்தி என்றெல்லாம் கூறப்படும்

இந்த நாளின் அடிப்படைக் கூறுகள் எவை?

,,,,,,,,,,,,,,,,,,,,

 

 

+தமிழ் மார்கழி மாதம் கடைசி நாள்

தமிழ் நாட்டில் #போகிப் #பண்டிகை

என்று அழைக்கப்படுகிறது.

 

 

+மறுநாள் பிறக்கும்

#தைத்திருநாள்

தூய்மையானதாகக்

கருதி புது வாழ்வைத்துவங்க

வேண்டும்.

 

 

+எனவே , பழையன கழித்து

புதியனவற்றை வரவேற்க

வேண்டும் என்பதற்காகப்

போகி பண்டிகை

கொண்டாடப்படுகிறது

என்று கூறப்படுகிறது.

 

 

+இதற்கு நன்னூல் எனும் இலக்கண

நூலின் கடைசி சூத்திரமான,

"#பழையனகழிதலும் ,

#புதியனபுகுதலும் #வழுவல

#காலவகையினானே

( சூத்திரம் எண்:462) "

எடுத்துக் காட்டப்படுகிறது.

 

 

+ இல்லத்திலுள்ள முதியவர்களும் ,

"மார்கழி பீடை மாதம்.

அந்த மாதத்தின்

கடைசி நாளில் வீட்டில் உள்ள

பயன்படாத , பழைபொருட்களை

அனலிலிட்டுப் பொசுக்கி அழித்து ,

பீடையை விரட்ட வேண்டும்" என்று

கூறுவர்.

 

 

+அன்றைய நாளில் வீட்டையும் ,

தூய்மைப்படுத்த வேண்டும்

என்றும் அறிவுறுத்துவர்.

 

 

+வீடுசுத்தமாக்கப்பட வேண்டும் ,

என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

+ஆனால் , வீட்டில் உள்ள

பழைய பயன்படாத பொருட்களை

அலைில் இட்டுக் கொளுத்த

வேண்டும் என்பது ஏற்புடையதன்று.

 

 

+ பொதுவாக , மார்கழியில் ,

அதிகாலை வேளையில்

பனியின் தாக்கத்தைப் போக்க ,

சுள்ளிகள். காய்ந்த மட்டைகள்.

பயனற்ற பொருட்கள்

ஆகியவற்றைத் தீயிட்டுக்

#குளிர்காய்தல் நாட்டுப்புறங்களில்

வழக்கமாக நடைபெறுவது இயல்பு.

 

 

மார்கழி நிறைவு நாளிலிருந்து

குளிரின் தாக்கம் குறைகின்ற

காரணத்தால் குளிர்காயச்

சேர்த்து வைத்த சுள்ளிகள்

மட்டைகளை ஒன்று திரட்டிக்

குவித்துத் தீயிட்டுக் கொளுத்தி

மார்கழியைப் "#போகுதி "

என்றுவிடை கொடுப்பது நிகழும்.

+எனவே "#போகுதி"மருவி "#போகி"

என்றானது எனக் கருதப்படுகிறது

 

 

+ எனினும் கொளுத்த எதுவும்

இல்லாத நிலையில் ,

#நெகிழிப்பொருட்கள்

(பிளஸ்டிக்/ Plastic) ஈருருளி மற்றும்

மகிழுந்துகளின் #வள்ளைகள்

(டயர் Tyre) எல்லாம் சேர்த்துக்

கொளுத்திச் சுற்றுச்சூழலை

மாசுபடுத்துவது முற்றிலும்

தவிர்க்கப்பட வேண்டியதல்லவா?

 

 

+ ஆகவே புகையில்லாப்

"போகியைக்" கொண்டாட

வேன்டும் என்பதில்

மாற்றுக்கருத்தில்லை.

 

 

+“கொளுத்துவதற்காக ".நம்மிடம்

பருப்பொருள் எவையும் இல்லாத

நிலையில் ,

முதலில் நமக்குள் மண்டிக் கிடக்கின்ற

#அகந்தையாவது கொளுத்துவோம்.

 

 

+ தீயதைக் கழித்து

நல்லதைச் சேர்ப்போம்

+நல்ல செயலுக்காய்

கைகளை கோப்போம்

+பழைய மூடக் கொள்கைகளைக்

கொளுத்தி

புதியதைப் படைப்போம்

 

 

+புதிய தமிழ்த்" #தைப்புத்தாண்டில்"

நேர்மையை

பின்பற்றி நடப்போம்

+உரிமையை வென்றிட

உண்மையாய் உழைப்போம்

+தீமையை நன்மைத்தீயிட்டு

முற்றிலும் அழிப்போம் .

 

 

நம்மை நாமே மாற்றினால்

நானிலம் மாறிடும்

நலங்கள் யாவும் கிடைத்திடும் .

+ புதிய தைத்திங்களில்

புத்தாடை பூண்டு புத்தரிசிப்

பொங்கலிட்டு. பெற்றோர்

உற்றார் உறவினர்களுடன்

தமிழர் திருநாளைக்

கொண்டாடி மகிழ்வோம்.

 

 

+நல் இதயங்கள்

கொண்டாட

உங்கள்

அனைவருக்கும்

#போகி , #பொங்கல்

வாழ்த்துகள் கூறி

மகிழ்கிறேன்.

 

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம.நடரசன்,

கூடுதல் ஆட்சியர்,

வே.வா..து..பெ..இணையம்,

{தி.பி.2052, சிலை (மார்கழி) 29]

{13-12-2020}

----------------------------------------------------------------------------------------------------