name='description'/> தமிழ்க்கனி: பெரியார்
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜனவரி, 2021

விடுதலை நாளும், பெரியாரும் காந்தியும்.

 

உண்மையை மறைக்கலாமா ?

🙏🙏🙏🙏🙏🙏🙏

விடுதலை நாளையும்

குடியரசு நாளையும்

தேசியக் கொடி ஏற்றுவதையும் 

புறக்கணிப்பவன் தேசத்துரோகி ....


- காவிகள் & காங்கிரஸ்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


ஆனால்.


விடுதலை நாளையும் 

தேசியக் கொடியையும்

"தந்தை பெரியாரைப் போன்றே "


புறக்கணித்த காந்தி

தேசத்தந்தை?


தந்தை பெரியார்

தேசத்துரோகி ?


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


இன்னொரு செய்தி........


காந்தியும் தந்தை பெரியாரும்

தம் வாழ்நாளில்

#தேசியக் #கொடியைக்

#கையால்கூடத் #தொட்டதில்லை.

ஏற்றவும் இல்லை.


அவர்கள்மறைவுக்குப் பின்தான்

தேசியக் கொடி அவர்களின்

உடல் மீது போர்த்தப்பட்டது.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம.நடராசன் 

[somanatarajan17@gmail.com]

ஆட்சியர்

துலக்கோல் முகநூல்

{தி.பி.2052,சுறவம் (தை)16}

(29-01-2021)

-------------------------------------------------------------------------------------------------------------



திங்கள், 25 ஜனவரி, 2021

பெரியார் - ஒரு குமுகாய சீர்திருத்தச் செம்மல் !

 

பௌத்தம் - சமணம் - பார்ப்பனீயம் - பெரியாரியம் !


#ஆசீவகம் முற்ற முழுக்க

#நாத்திகம்கொள்கையை

அடிப்படையாகக் கொண்டது .

புலால் மறுத்தலை முன்வைத்தது.

எனவே அவற்றைத் தமிழர்கள்

ஏற்கவில்லை.

ஆகவே அது

சில சமரசங்களைச் செய்து

கொண்டு

#சமணமாகவும் #பௌத்தமாகவும் உருவெடுத்தது.

உயிர்க்கொலை கூடாது

என்பது கருத்தியலாக மட்டும் இருந்தது.

எனினும் #சமணர்கள்

புலால் மறுத்தலை வலியுறுத்தினர்.

ஆனால் #பெளத்தர்கள்

புலால் மறுத்தலை அவரவர்

விருப்பத்திற்கு விட்டு விட்டனர்.

பெளத்தன் ஒருவன்

பன்றிக்கறி உணவு

தந்து அதனை உண்ட

#புத்தர் உடல் நலிவுற்று

மாண்டார் என்பது வரலாறு.

எனினும் சமண

தீர்த்தங்கரர்கள், புத்தர் காலத்தில்

கடவுள் /உருவ வழிபாடு

என்பது முற்றிலும் தடுக்கப்பட்டது.

ஆனால், அவர்களின்

காலத்திற்குப் பின்னர்,

சமணத்தின் #தீர்த்தங்கரர்களும்,,,,,

பௌத்தத்தின் #புத்தரும்,,,,,

உருவம் பெற்றுக்

கடவுளர்களுக்கு

இணையானவர்களாக

வணங்கப்பட்டனர்.

மொத்தத்தில்,

உருவ வழிபாடு கூடாது

என்பதும் நீர்த்துப் போயிற்று.

இந்த நிலையில் #ஆரியம் உட்புகுந்தது.

#உருத்திரன்  #விஷ்ணு,

#பிரம்மன்  #இந்திரன் என்ற

கற்பனையாைன

கடவுள்களைப் புகுத்தினர்.

நாளடைவில்,,,,,,

#உருத்திரன் #சிவன் ஆனார்.

#விஷ்ணு #திருமால் ஆளார்.

#பிரம்மன் #பிராமணன் ஆனான்.

இவற்றையெல்லாம்

ஏற்கும்படி செய்ய, பல்வேறு

புராணங்களை இயற்றி ,

உருவ அமைப்புக் கொடுத்து,,,,.

அவ்வுருவங்களுக்கு என

வானளாவிய கோயில்களை

அரசர்களைக் கொண்டு

அமைத்தனர் #பார்ப்பனர்கள்.

அக் கடவுள்களின்

அருள் பெறத்

தாங்கள்தான் உதவ

முடியும் என்றும்,

கடவுளர்கள் தம்முள் அடக்கம்

என்றும்,,,,,,

தம்மை #உயர்குலத்தவர்

என்றும், மற்றவர்கள்

தங்களுக்குக் கீழ் இருந்து

சேவகம் செய்ய வேண்டிய

#சூத்திரர்கள் என்பது

ஆண்டவன் கட்டளை என்றும்

நம்ப வைத்தனர்.

இப்படித்தான் #பார்ப்பனியம்

நாட்டில் வேரூன்றியது.

அந்த வேர்களின் ஆணிவேரை

அடியோடு ஒழிக்க வேண்டும்,

என்பதற்காகவே #பெரியார்

தோன்றினார்.

அவர் உயிரோடிருந்த

காலம் வரை #பெரியாரியம் வளர்ந்தது.

ஆனால், அவரின் காலத்திற்குப்பின்,,,,

#ஆசீவகம்  #சமணம்

#பெளத்தம் போன்றே

#பெரியாரியமும் நீர்த்துப் போகத்

தொடங்கி விட்டது.

#பார்ப்பனீயம் ஒழிவதற்குத் தீர்வு என்ன???

ஆயிரம் பொன் கேள்வி !!!

விடை கூறி பார்ப்பனியத்திற்கு

விடை கொடுக்கும்

வரலாற்று நாயகன் எப்போது

தோன்றுவானோ யாரே அறிகுவர்?

 

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம. நடராசன்
[somanatarajan17@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

வே.வா.ப.து.ஓ.பெ.அ.இணையம்.

{தி.பி.2052, சுறவம் (தை) 12}

25-01-2021

-----------------------------------------------------------------------------------------------------

 

வியாழன், 21 ஜனவரி, 2021

தந்தை பெரியார் ஒரு தகைசான்ற முன்னறிவர் !

 

வருபவற்றைக் கணித்து  உரைத்த வல்லவர் !

#பெரியார் ஒரு முன்னறிவர் (Prophet)

என்பதற்கு மற்றுமோர் சான்று.

1943 இலேயே #பெரியார்

முன்னறிவித்த

செய்திகளைஇங்கே

உங்கள் பார்வைக்கு

வைக்கிறேன்.

#உணவுக்_குப்பி!

*****

1.போக்குவரத்து :

எங்கும் ஆகாய விமானமாகவே

இருக்கும். (Airways Travel)*

 

2.கம்பியில்லாத் தந்திச்

சாதனம் ஒவ்வொருவர்

சட்டைப் பையிலும்

இருக்கும். (Mobile-phones)*

 

3.ரேடியோ ஒவ்வொருவர்

தொப்பியிலும்

அமைக்கப்பட்டிருக்கும்.

(Headphones)*

 

4.உருவத்தைத் தந்தியில்

அனுப்பும்படியான சாதனம்

மலிந்து ஆளுக்காள்

உருவம் காட்டிப் பேசிக்

கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.

(Video Conference)*

 

5,மேல்கண்ட சாதனங்களால்

ஓரிடத்தில் இருந்து கொண்டே

பல இடங்களில் உள்ள மக்களுக்குக்

கல்வி கற்றுக் கொடுக்கப் படும்.

(Online Classes)*

 

6.பல நாள்களுக்குப்

பயன்படும்படியான உணவு

சத்துப்பொருளாகச் சுருக்கப்பட்டு

ஒரு சிறு குப்பியில்

அடக்கக் கூடியதாக இருக்கும்.

(Astronauts Are Provided With

FoodCapsules) *

 

(பெரியார், குடி_அரசு - 28.03.1943)

* ஆங்கிலக் குறிப்புகள் என்னுடையவை.

 

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம.நடரசன்,

கூடுதல் ஆட்சியர்,

வே.வா..து..பெ..இணையம்,

{தி.பி.2052, சுறவம் (தை) 07]

{20-01-2021}

-----------------------------------------------------------------------------------------------------



புதன், 20 ஜனவரி, 2021

பெரியாரும் அவரது கடவுட் கொள்கையும்.

 

பெரியார் சொன்னதென்ன ?


பெரியார் எந்தக் #கடவுளை_இல்லை

என்று சொன்னார்?


Strike At The Roots of The Evils ! என்பார்கள் .

"எவை தீயவைகளோ அவற்றின்

வேர்களை அடியோடு வெட்டிச் சாய்த்து விடு"

என்பது பொருள் !


பார்ப்பனிய வேர்கள்

"தானே கடவுள்

( #ப்ராஹ்மணோ_மம_தெய்வதம்) "

என்று கூறினார்கள்


மக்களை மூடர்களாக,

அடிமைகளாக ஆக்கி வைத்தவர்கள்

பார்ப்பனர்கள்.


ஆலயங்களில் சிலைகளை வைத்து

அதைத் தங்களின் கூறுகள் (அம்சம்)

என்றார்கள்.


அவற்றைப் பிறர் தீண்டக் கூடாது என்றார்கள்.

எனவே, தன்னையே கடவுள் என்கிற #பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டும் |

தங்களின் கூறுகள் எனக் கூறும் ஆலயச்

சிலைகள்

#கடவுள்_இல்லை

#கடவுள்_இல்லை

#கடவுள்_இல்லவே_இல்லை

#கடவுளைப்_பரப்புபவன்_அயோக்கியன்

#கடவுளை_நம்புபவன்_முட்டாள்

என்று முழங்கினார் #பெரியார்


"ஒருவேளை , கடவுள் உங்கள்

முன்னே வந்து நின்று #நான்தான்_கடவுள் !

என்று நிரூபித்தால் என்ன செய்வீர்கள்?"

எனப் பெரியாரைக் கேட்டார்கள்.


"அவர்தான் கடவுள் என்று நிரூபித்தால்,

அதை ஏற்றுக் கொண்டு, அவருடன்

ஊர் ஊராகச் சென்று,,,,,

"இதோ இவர்தான் கடவுள்,

கோவிலில் இருப்பவையோ,

அவற்றை வைத்து மக்களை

மூடர்களாக, அடிமைகளாக

வைத்துள்ள பார்ப்பனர்களோ

#கடவுள்_இல்லை , என்று

எல்லாருக்கும் காட்டுவேன்"

என்றார் பெரியார் !


ஆகவே எந்தக் கடவுளை #இல்லை

என்று பெரியார் சொன்னார்

என்பதை நாம் உணரவேண்டும் !

-----------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

சோம.நடராசன்,

கூடுதல் ஆட்சியர்,

வே.வா.ப.து.ஓ.பெ.அ.இணையம்,

(தி.பி.2051, சிலை(மார்கழி) 15]

{30-12-2020}

-----------------------------------------------------------------------------------------------------