பௌத்தம் - சமணம் - பார்ப்பனீயம் - பெரியாரியம் !
#ஆசீவகம்
முற்ற முழுக்க
#நாத்திகம்கொள்கையை
அடிப்படையாகக் கொண்டது .
புலால் மறுத்தலை
முன்வைத்தது.
எனவே அவற்றைத்
தமிழர்கள்
ஏற்கவில்லை.
ஆகவே அது
சில சமரசங்களைச் செய்து
கொண்டு
#சமணமாகவும் #பௌத்தமாகவும் உருவெடுத்தது.
உயிர்க்கொலை கூடாது
என்பது கருத்தியலாக
மட்டும் இருந்தது.
எனினும் #சமணர்கள்
புலால் மறுத்தலை
வலியுறுத்தினர்.
ஆனால் #பெளத்தர்கள்
புலால் மறுத்தலை அவரவர்
விருப்பத்திற்கு விட்டு
விட்டனர்.
பெளத்தன் ஒருவன்
பன்றிக்கறி உணவு
தந்து அதனை உண்ட
#புத்தர் உடல்
நலிவுற்று
மாண்டார் என்பது
வரலாறு.
எனினும் சமண
தீர்த்தங்கரர்கள், புத்தர்
காலத்தில்
கடவுள் /உருவ வழிபாடு
என்பது முற்றிலும்
தடுக்கப்பட்டது.
ஆனால், அவர்களின்
காலத்திற்குப் பின்னர்,
சமணத்தின் #தீர்த்தங்கரர்களும்,,,,,
பௌத்தத்தின் #புத்தரும்,,,,,
உருவம் பெற்றுக்
கடவுளர்களுக்கு
இணையானவர்களாக
வணங்கப்பட்டனர்.
மொத்தத்தில்,
உருவ வழிபாடு கூடாது
என்பதும் நீர்த்துப்
போயிற்று.
இந்த நிலையில் #ஆரியம் உட்புகுந்தது.
#உருத்திரன் #விஷ்ணு,
#பிரம்மன் #இந்திரன்
என்ற
கற்பனையாைன
கடவுள்களைப்
புகுத்தினர்.
நாளடைவில்,,,,,,
#உருத்திரன் #சிவன் ஆனார்.
#விஷ்ணு #திருமால் ஆளார்.
#பிரம்மன் #பிராமணன் ஆனான்.
இவற்றையெல்லாம்
ஏற்கும்படி செய்ய, பல்வேறு
புராணங்களை இயற்றி ,
உருவ அமைப்புக்
கொடுத்து,,,,.
அவ்வுருவங்களுக்கு என
வானளாவிய கோயில்களை
அரசர்களைக் கொண்டு
அமைத்தனர் #பார்ப்பனர்கள்.
அக் கடவுள்களின்
அருள் பெறத்
தாங்கள்தான் உதவ
முடியும் என்றும்,
கடவுளர்கள் தம்முள்
அடக்கம்
என்றும்,,,,,,
தம்மை #உயர்குலத்தவர்
என்றும், மற்றவர்கள்
தங்களுக்குக் கீழ்
இருந்து
சேவகம் செய்ய வேண்டிய
#சூத்திரர்கள் என்பது
ஆண்டவன் கட்டளை என்றும்
நம்ப வைத்தனர்.
இப்படித்தான் #பார்ப்பனியம்
நாட்டில் வேரூன்றியது.
அந்த வேர்களின் ஆணிவேரை
அடியோடு ஒழிக்க
வேண்டும்,
என்பதற்காகவே #பெரியார்
தோன்றினார்.
அவர் உயிரோடிருந்த
காலம் வரை #பெரியாரியம் வளர்ந்தது.
ஆனால், அவரின்
காலத்திற்குப்பின்,,,,
#ஆசீவகம் #சமணம்
#பெளத்தம் போன்றே
#பெரியாரியமும் நீர்த்துப் போகத்
தொடங்கி விட்டது.
#பார்ப்பனீயம் ஒழிவதற்குத் தீர்வு என்ன???
ஆயிரம் பொன் கேள்வி !!!
விடை கூறி
பார்ப்பனியத்திற்கு
விடை கொடுக்கும்
வரலாற்று நாயகன் எப்போது
தோன்றுவானோ யாரே
அறிகுவர்?
-----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
சோம. நடராசன்
[somanatarajan17@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
வே.வா.ப.து.ஓ.பெ.அ.இணையம்.
{தி.பி.2052, சுறவம் (தை) 12}
25-01-2021
-----------------------------------------------------------------------------------------------------
ஆழ்ந்த ஆராய்ச்சி ! பாராட்டுகள் !
பதிலளிநீக்கு