வருபவற்றைக் கணித்து உரைத்த வல்லவர் !
#பெரியார் ஒரு முன்னறிவர் (Prophet)
என்பதற்கு மற்றுமோர்
சான்று.
1943 இலேயே
#பெரியார்
முன்னறிவித்த
செய்திகளைஇங்கே
உங்கள் பார்வைக்கு
வைக்கிறேன்.
*****
1.போக்குவரத்து
:
எங்கும் ஆகாய
விமானமாகவே
இருக்கும். (Airways Travel)*
2.கம்பியில்லாத்
தந்திச்
சாதனம் ஒவ்வொருவர்
சட்டைப் பையிலும்
இருக்கும். (Mobile-phones)*
3.ரேடியோ
ஒவ்வொருவர்
தொப்பியிலும்
அமைக்கப்பட்டிருக்கும்.
(Headphones)*
4.உருவத்தைத்
தந்தியில்
அனுப்பும்படியான சாதனம்
மலிந்து ஆளுக்காள்
உருவம் காட்டிப் பேசிக்
கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.
(Video Conference)*
5,மேல்கண்ட
சாதனங்களால்
ஓரிடத்தில் இருந்து
கொண்டே
பல இடங்களில் உள்ள
மக்களுக்குக்
கல்வி கற்றுக்
கொடுக்கப் படும்.
(Online Classes)*
6.பல
நாள்களுக்குப்
பயன்படும்படியான உணவு
சத்துப்பொருளாகச்
சுருக்கப்பட்டு
ஒரு சிறு குப்பியில்
அடக்கக் கூடியதாக
இருக்கும்.
(Astronauts Are
Provided With
FoodCapsules) *
(பெரியார்,
குடி_அரசு - 28.03.1943)
* ஆங்கிலக்
குறிப்புகள் என்னுடையவை.
-----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
சோம.நடரசன்,
கூடுதல் ஆட்சியர்,
வே.வா.ப.து.ஓ.பெ.அ.இணையம்,
{தி.பி.2052, சுறவம் (தை) 07]
{20-01-2021}
-----------------------------------------------------------------------------------------------------
எதிர்காலத்தில் நடக்கப் போவதை 1943 வாக்கிலேயே கணித்துச் சொன்ன பெரியார் உண்மையிலேயே ஒரு முன்னறிவர் தான் ! பதிவுக்குப் பாராட்டுகல் !
பதிலளிநீக்குபெரியாரைப் போன்ற அறிஞர்கள் எப்போதாவது தான் தோன்றுவர் போலும் !
பதிலளிநீக்கு