name='description'/> தமிழ்க்கனி: கவி மாமன்னன் கம்பன் - ஒரு பார்வை !
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

செவ்வாய், 19 ஜனவரி, 2021

கவி மாமன்னன் கம்பன் - ஒரு பார்வை !

 

கம்பனின் இறை நம்பிக்கை !


கம்பன் #நாத்திகத்தையும்

ஆதரிப்பவன்" என்று ஒரு
பகுத்தறிவாள அன்பர் கூறினார்.
"இராமனைக் கடவுளின்
அவதாரம் என்று கூறியவன் கம்பன்.
"கடவுள் வணக்கப் பாடலில் அவர் ,
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும் ,
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா ,
அலகிலா விளையாட்டுடையார் அவர் ,
தலைவர் ., அன்னவர்க்கே சரண் நாங்களே !
"என்று கடவுள் வாழ்த்துக் கூறித்தான்
அவன் தன் காப்பியத்தைக்
#கடவுள்வணக்கத்துடன் தொடங்குகிறான்.
"தன்னுடைய காப்பியத்திற்கு
அவன் சூட்டிய பெயர் #இராமாவதாரம்.
"இப்படி இருக்கையில் அவன்
நாத்திகத்தை ஆதரித்தான்
என்று கூறுவது ஏற்பு டையதன்று "
என்று கூறினேன்.
"இல்லை , இப்படிக் கூறியுள்ளான்
என்று தோழர் ப. ஜீவானந்தம்
கம்பராமாயணச் செய்யுள்
ஒன்றினை மேற்கோள் காட்டிப்
பேசியுள்ளார் என்று படித்துள்ளேன் -
என்றார் அந்த நண்பர்.
கம்பராமாயணத்தைப் புரட்டினேன்.
ஆம் , யுத்த காண்டம் காப்புச்
செய்யுளில், அந்த அன்பர் கூறிய
கருத்து அமையும்படி ஒரு பாடல் உள்ளது.
அப்பாடலும் , அதன் பொருளும்
இங்கே உங்கள் பார்வைக்கு :
ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!
(யுத்த காண்டம் / கடவுள் வாழ்த்து /
பாடல் எண் : 6059)
இதன் பொருள் :
இறைவன் ஒன்று என்று
சொன்னால் ஒன்றுதான்;
பல என்றால் பலவேதான்;
அப்படி அல்ல என்றாலும்
அல்லதான்;
அப்படித்தான் என்றால்
ஆம் அப்படித்தான்;
உண்டு என்றாலும் உண்டுதான்;
எல்லாம் நமது நம்பிக்கையில்தான்
இருக்கிறது.
இதனை உணர்ந்து கொண்டால்
நம் வாழ்வு நன்றாக அமையும்.
,,,,,,,,,,,,,,,,,,,
ஆம் , கொஞ்சம் ஆழ்ந்து
சிந்தித்துப் பார்த்தால்
#கடவுள்இல்லை
என்பதையும் #ஏற்கலாம் என்று
கம்பன் அதை ஆமோதித்திருக்கிறான்
என்றே தோன்றுகிறது.
மேலும், வால்மீகி இராமாயணத்தில்,
#ஜாபாலி என்றொரு முனிவர்
தசரதனின்
அரசவையில் இருந்திருக்கிறார்.
அவர் ராமனுக்கு நாத்திகம்
போதித்தார் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது!(காண்க: பக்கம் 224 /
ராஜாஜி ராமாயணம்)
"கடவுள் இல்லை, இல்லவே இல்லை"
என்றார் #பெரியார்
// (கடவுள்)உண்டென்பார் சில பேர்
இல்லை என்பார் சில பேர்
எமக்கில்லை கடவுட் கவலை //
எனக் கூறுகிறார்.
// உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை //
என்றான்.
ஆகவே, #இறைமறுப்பு என்பது
கம்பன் காலத்திலும்
அதைத்தொடர்ந்து #பெரியார், #பாவேந்தர், #கண்ணதாசன் காலத்திலும் ,
நிலவி வருகிறது என்பது தெரிகிறது.
உங்கள் கருத்து என்ன?

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
சோம. நடராசன்,
[somanatarajan17@gmail.com]
கூடுதல் ஆட்சியர்’
வே.வா.ப.து.ஓ.பெ.அ.இணையம்,
[சுறவம் 6, 2052]
(19.1.2021)



-------------------------------------------------------------------------------------------------------------








1 கருத்து:

  1. இறைமறுப்புக் கொள்கை எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. இறை நம்பிக்கை என்னும் பெயரில் இந்தியாவில் சொல்லப்பட்ட - சொல்லப்படும் புனைகதைகள் ஏராளம். பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்தக் கதைகளே மக்களைப் பார்ப்பனீயத்துக்கு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது !

    பதிலளிநீக்கு