name='description'/> தமிழ்க்கனி: ஜனவரி 2021
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

வெள்ளி, 29 ஜனவரி, 2021

இளம் புலவர் ஒட்டக்கூத்தர் !

 

துரோபதையை மூக்கரிந்ததல்லவா மாபாரதம் !

 ♦️♦️♦️♦️♦️

காலம் 10 ஆம் நூற்றாண்டு.


மன்னர் #விக்கிரமசோழர் அரசவை.


அரசர் ஒரு வரியைக்கூறுகிறார் :


வாலி திரௌபதையை 

மூக்கரிந்ததல்லவோ மாபாரதம்*"

இது தவறல்ல; உண்மைப் 

பொருள்தரும் வரிதான் !

ஆகவே புலவர் கூட்டம் 

இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் அது எப்படி சரி 

என்று விளக்க வேண்டும் ! "


புலவர் கூட்டம் திகைத்து நின்றது !.


ஓர் இளைஞர் எழுந்துநின்றார்.


" அரசர் பெருமானே , 

புலவர் பெருமக்களே 

வணங்குகிறேன் !


"அரசர் பெருமான் கூற்று 

உண்மைதான்” என்று

ஒரு வெண்பாவைக் கூறினார் 

இளம் புலவர் !


"புள்ளிருக்கும் தார்மார்பன் பூம்புகார் வாழ்களியேம்

சுள்ளிருக்கும் கள்ளையுண்டும் சோர்விலேம் - உள்ளபடி

சொல்லவா வாலிது ரோபதையை மூக்கரிந்த

தல்லவா மாபா ரதம்?''


இதைக்கேட்ட மன்னர் 

விக்கிரம சோழன்

பெருமகிழ்ச்சியடைந்தார் !


"நன்று புலவரே. நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் இங்குள்ள பிற புலவர் பெருமக்கள்

பொருள் புரியமல் திகைத்து நிற்கின்றனர்.

அவரகளுக்கு விளக்குங்கள்" என்றார்.


இளம்புலவர் விளக்கினார் !


"*சிற்றிலக்கிய வகைகளில் 

"கலம்பகம்"

என்பதும் ஒன்று.

கலம்பகத்தின் ஒரு கூறு "களி".


கற்றறிந்தவர்கள் கள்ளைக் 

குடித்து மயங்கினாலும் , 

தம்முடைய புலமைச்

செருக்கை இழக்க 

மாட்டார்கள் !


ஆனால், சில நிகழ்வுகளைக் 

கேட்பவர் மயக்குறும் வகையில் வெளிப்படுத்துவார்கள் !


"அந்த வகையில் அமைந்ததுதான் 

நான்கூறிய வெண்பா”.


"இதில்  மன்னர் இயம்பிய கடைசி

வரியில் கூறப்பட்ட செய்தி நிகழ்ந்த

நேர்வை விரித்துக் கூறியுள்ளேன்."

என்றார் இளம்புலவர் !


"சரி உம் வெண்பாவின்

பொருளை விளக்கமாகக் கூறுங்கள்"

என்றார் மன்னர் !


இளம்புலவர் தொடர்ந்தார் !


"வாலி என்பது வால்த்தனம் மிக்க

#துச்சாதனனைக் குறிக்கும்.


"#மூக்கரிதல் என்பது 

திரௌபதியைத் துகிலுரிந்து அவமானப்படுத்தியதைக் 

குறிக்கின்ற பொருள்தரும்.

இந்நிகழ்வு #மகாபாரதத்தில் நிகழ்ந்தது !


"ஆனால் வாலி என்ற பாத்திரமும்,

சூர்பனகையின் "மூக்கரிதல்" என்கிற 

நிகழ்வும் #இராமாயணம் 

கூறும் செய்தி !


"இப்படிச் சிற்றிலக்கிய வகையில் ஓர்

உறுப்பான "கலம்பகத்தில் களி"க்கு 

ஏற்றவகையில் பொருள் மயக்கம் 

தரும்வகையில் கவிபாடுவது கள்குடித்த  

புலமைமிக்கோருக்குக் 

கைவந்த கலை !


"கள்ளைக் குடித்தாலும் தங்களின

புலமையை இழக்காதவர்களாகப்

புலவர் கூட்டம் இருப்பதை 

வெளிப்படுத்தும் செய்தியைத்தான் 

நான் இவ்வெண்பாவில்

கூறியுள்ளேன்." என்றார் இளம் புலவர் !


இதனைக் கேட்ட அரசன் உள்ளிட்ட 

அவையோர் பெருவியப்பில் 

ஆழ்ந்து மகிழ்ச்சி பொங்கப்

பாராட்டினர் !


மன்னர் விக்கிரமசோழர்

"புலவரே ! இன்று முதல்

தாங்கள்தான் இப்புலவர் 

கூட்டத்தின் முதன்மைப்

புலவர் ” !


”என் அரசவையின் அவைக்களப்

 புலவராகவும் அரச பரம்பரைக்கு 

நீங்களே கல்வி

போதிக்கும் #ஆசானும் ஆக 

இருக்க வேண்டும்” 

என்று கூறி வரவேற்றார் !


அந்தப் புலவர்தான் #கவிச்சக்கரவர்த்தி ,

#கௌடப்புலவர், #கவிராட்சசன் என்று

அறியப்பெற்ற #ஒட்டக்கூத்தர் பெருமான்.

   ♦️♦️♦️♦️♦️

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம.நடராசன்,
[somanatarajan17@gmail.com]
ஆட்சியர்,
துலாக்கோல் முகநூல்
{தி.பி.2052,சுறவம்(தை) 29}
29-01-2021
-------------------------------------------------------------------------------------------------------------



வியாழன், 28 ஜனவரி, 2021

நந்தமிழ் நாட்டின் நாற்பெருந் தலைவர்கள் !

 

விடுதலைப் போராட்ட வீரர்கள் !

🙏🙏🙏🙏🙏🙏🙏

இன்று 

#பஞ்சாப்சிங்கம் 

#லாலாலஜபதிராய் 

பிறந்த நாள்  28, ஜனவரி , (1865)


*பஞ்சாபின் #லாலா #லஜபதிராய் 

விடுதலைப் போராட்ட வீரர் 

என்பது  உண்மை. அதே வேளையில் 

அவர் ஒர் கடைந்தெடுத்த 

#இந்துத்துவவாதி என்பது 

வேதனையான செய்தி.


*இன்றைய நச்சு மரங்களான 

#ஆர்எஸ்எஸ் , #பாஜக ஆகிய 

கும்பல்களின் தாய் நிறுவனமான 

#இந்து #மகாசபையின் மூலவர்களில் 

ஒருவர் இந்த லாலா .


*இவருடன் விடுதலை இயக்கத்தில் 

இணைந்து செயல்பட்டவர்கள் 

மராட்டியத்தின் #பாலகங்காதரதிலகர் , 

வங்காளத்தின் *#விபின்சந்திரபால் 

ஆகியோர் ஆவர். (இவ்விருவரும்,

#கப்பலோட்டியதமிழர் வ.உ. #சிதம்பரனாரின்

உற்ற நண்பர்கள்)


* இவர்களை முப்பெரும் வீரர்கள் 

என்று கூறுவர்.


* அவர்கள் "லால் , பால் , ப்பால் 

(Lal, Bal, Pal) என்று அடையாளப்படுத்தப்

பட்டனர்.


* அந்த காலகட்டத்தில் 

நம் தென்னகத்திலும்

#உண்மையான #நாற்பெரும் 

#விடுதலைப்போராட்ட #வீரர்கள் 

இருந்தனர். 


அவர்கள் வேறு யாருமல்லர்,

அந்தக்கால 

வழக்கப்படி அவர்கள் 

பிறந்த குலத்தின் அடைமொழியால், 

#பிள்ளை #முதலியார் , 

#நாயக்கர் , #ஐயர் என 

அறியபட்ட 

வள்ளியப்பன் உலகநாதம் பிள்ளை #சிதம்பரம்பிள்ளை , 

திருவாரூர் வி. #கலியாணசுந்தரமுதலியார் , 

ஈரோடு வேங்கடசாமி நாயக்கர் 

இராமசாமிநாயக்கர் , 

மதுரை அ. வைத்தியநாதஐயர். 

ஆகியவர்கள்தான் அவர்கள் !


அனைவர் நினைவையும் போற்றுவோம்.


🙏🙏🙏🙏🙏🙏🙏

-----------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம.நடராசன்

[somanatarasan17@gmail.com]

ஆட்சியர்

துலாக்கோல் முகநூல்

{தி.பி.2051,சுறவம் (தை) 15

{28-01-2021}

------------------------------------------------------------------------------------------------------------------




தமிழாய்ந்த தலைமகன் - கலைஞரின் சாதனைகள் !

 கலைஞர் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் ? 


1. ”போக்குவரத்து துறை” என்ற துறையை உருவாக்கியது கலைஞர்


2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்


3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்


4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் #சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்


5. தமிழ்நாடு #குடிசை மாற்று #வாரியம் அமைத்தது கலைஞர்


6. #குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்


7. முதலில் இலவச #கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர்


8. பிச்சைகாரர்கள் #மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர்


9. #கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து #இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்


10. இலவச கான்கிரீட் #வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்


11. #குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்


12. இந்தியாவிலே முதன் முதலில் #காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்


13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென #துறை அமைத்தது கலைஞர்


14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான #அமைப்பை அமைத்தது கலைஞர்


15. அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோர்  - 31%, தாழ்த்தப்பட்டோர்  - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்


16. புகுமுகவகுப்பு வரை #இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்


17. #மே 1, #சம்பளத்துடன் கூடிய பொது #விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்


18. வாழ்ந்த மனிதரான #நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்


19. முதல் #விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்


20. #அரசு #ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்


21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்


22. #மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்


23. கோவில்களில் குழந்தைகளுக்கான " #கருணை #இல்லம் " தந்தது கலைஞர்


24. சேலம் #இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்


25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்


26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்


27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்


28.சிட்கோ  (SIDCO) உருவாக்கியது கலைஞர்


29. சிப்காட் (SIPCOT) உருவாக்கியது கலைஞர்


30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்


31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர் 


32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்


33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்


34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்


35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்


36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்


37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்


38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்


39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்


40. மிகபிர்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்


41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்


42. தாழ்த்தப்பட்டோருக்கு #இலவச #கல்வி தந்தது


43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்


44. சொத்தில் #பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்


45. அரசு வேலை வாய்ப்புகளில் #பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்


46. ஆசியாவிலே முதன் முறையாக #கால்நடை மற்றும் #விலங்குகள் அறிவியல் #பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்


47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்


48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்


49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்


50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்


51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்


52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்


53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்


54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்


55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்


56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்


57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்


58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்


59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு


60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்


61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்


62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்


63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்


64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்


65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்


66. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்


67.அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்


68.தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்


69.செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்


70.சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்


71.பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் கலைஞர்


72.#விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர். (2006-2011 வரைஐந்து ஆண்டுகளில் #பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)


73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர் கலைஞர். #விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)


74.ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.


75.#நன்றிக் கடனாக, #சரியான(தேர்தல்) நேரத்தில், பழி #கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை #படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள்.


76.. ஈழக் கொடி பிடிக்கும் #விசமிகள், ஈழத்திற்கு செய்தது என்ன??? கலைஞர் போல பதவி துறந்தார்களா???(ஈழத்தமிழர் நலனுக்காக, அன்றைய மத்திய மாநில அரசுகளின் நிலையை எதிர்த்து, #1983ல் #கலைஞரும், பேராசிரியரும் பதவியை #ராஜினாமா செய்தனர்) ஆட்சி இழந்தார்களா???(1991ல், விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறது, நாட்டின் இரகசியங்களை பாதுகாக்கத் தவறி விட்டது தமிழக அரசு என்று கூறி அன்றைய கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது)


77. #காமராசரை போற்றிப் புகழும் மக்களுக்கு, அக் கர்மவீரர் காமராசரை கைது செய்ய முடியாது என்று கூறி, அவசர நிலையை சந்தித்து, 1975ல்ஆட்சி இழந்தவர் கலைஞர். நினைத்திருந்தால், இந்திராவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து, காமராசரை கைது செய்து, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கலாம் கலைஞர்.


#ஆரியர்கள் கலைஞர் ஆட்சியை எதிர்ப்பதில் இருந்தே தெரியவில்லையா, கலைஞர் நமக்காக என்ன செய்தார் என்று ?


இன்று கலைஞருக்கு இத்தனை வசைப்பட்டங்கள் சூட்டும் பக்கிகள், அவரின் தியாகங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கத் தவறியதேன்?

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம.நடராசன்
[somanatarajan17@gmail.con]
ஆட்சியர்
துலாக்கோல்  முகநூல்
{தி.பி.2052, சுறவம் (தை)16}
(29-01-2021)
-------------------------------------------------------------------------------------------------------------






விடுதலை நாளும், பெரியாரும் காந்தியும்.

 

உண்மையை மறைக்கலாமா ?

🙏🙏🙏🙏🙏🙏🙏

விடுதலை நாளையும்

குடியரசு நாளையும்

தேசியக் கொடி ஏற்றுவதையும் 

புறக்கணிப்பவன் தேசத்துரோகி ....


- காவிகள் & காங்கிரஸ்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


ஆனால்.


விடுதலை நாளையும் 

தேசியக் கொடியையும்

"தந்தை பெரியாரைப் போன்றே "


புறக்கணித்த காந்தி

தேசத்தந்தை?


தந்தை பெரியார்

தேசத்துரோகி ?


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


இன்னொரு செய்தி........


காந்தியும் தந்தை பெரியாரும்

தம் வாழ்நாளில்

#தேசியக் #கொடியைக்

#கையால்கூடத் #தொட்டதில்லை.

ஏற்றவும் இல்லை.


அவர்கள்மறைவுக்குப் பின்தான்

தேசியக் கொடி அவர்களின்

உடல் மீது போர்த்தப்பட்டது.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம.நடராசன் 

[somanatarajan17@gmail.com]

ஆட்சியர்

துலக்கோல் முகநூல்

{தி.பி.2052,சுறவம் (தை)16}

(29-01-2021)

-------------------------------------------------------------------------------------------------------------



புலால் தவிர்ப்போம் ! உடல் நலம் பேணுவோம் !


ஊன் உண்ணுதலைத் 

தவிர்க்க வேண்டும்

என்பதை உடல் நலம் பேணுபவர் 

கடைப்பிடிக்க வேண்டும்


பேராசான் திருவள்ளுவரும் 

இதனை புலான்மறுத்தல் என்கிற 

அதிகாரத்தில் (26) வலிமையாக 

வலியுறுத்தியுள்ளார்


ஆனால், உலக மக்களில், 

புலான்மறுத்தலைக் 

கடைப்பிடிப்பவர்கள் 

மீச்சிறுபான்மையினர்தான்.


எனினும், தற்காலத்தில்

அகவை முதிர்ந்தவர்கள்

செரிமானக்கோளாறு காரணத்தால்,

புலால் உண்ணுதலைக்

கைவிட்டுவிடுகிறார்கள்.

அவர்களை வணங்கி

வாழ்த்துவோம்


இன்று பேரருட்பேரொளி

அருட்பிரகாச வள்ளற்பெருமான்

இறைவனுடன் தம்மை 

ஆட்படுத்திக்கொண்ட

தைப்பூசத் திருநாள்.


பேராசானுக்குப்பின், 

புலான் மறுத்தலை

வலியுறுத்தியவர் 

பேரருட்பேரொளி

வள்ளற்பெருமான் ஆவார்.


இந்நாளில், புலான் மறுத்தலை 

நாம்அனைவரும் கடைப்பிடிப்போம்

என்று உறுதியேற்பதே

வள்ளுவப் பெருந்தகைக்கும்.

வள்ளற்பெருமானுக்கு நாம் செலுத்தும்

பெருநன்றிக் கடனாகும்.


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உலகும் தொழும் .

 #பேராசான்_வள்ளுவர்#


கங்கையிற் படிந்திட்டாலும்

கடவுளைப் பூசித்தாலும்

சங்கையில்லாத ஞான 

சாத்திரம் உணர்ந்திட்டாலும்


*மங்குல்போல் கோடி தானம்

வள்ளலாய் வழங்கிட்டாலும்

பொங்குறு #புலால்_புசிப்போன்

போய் நரகு அவைவன் அன்றோ !

#பேரருட்பேரொளி_வள்ளலார்#

--------------------------------------

* மங்குல் = வானம்

-----------------------------------------------------------------------------------

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை



சோம . நடராசன்

[somanatarajan17@gmail.com ]

ஆட்சியர்

துலாக்கோல் முகநூல்

{தி.பி:2052: சுறவம் (தை)15}

28-01-2021

------------------------------------------------------------------------------------------------------------------






திங்கள், 25 ஜனவரி, 2021

பெரியார் - ஒரு குமுகாய சீர்திருத்தச் செம்மல் !

 

பௌத்தம் - சமணம் - பார்ப்பனீயம் - பெரியாரியம் !


#ஆசீவகம் முற்ற முழுக்க

#நாத்திகம்கொள்கையை

அடிப்படையாகக் கொண்டது .

புலால் மறுத்தலை முன்வைத்தது.

எனவே அவற்றைத் தமிழர்கள்

ஏற்கவில்லை.

ஆகவே அது

சில சமரசங்களைச் செய்து

கொண்டு

#சமணமாகவும் #பௌத்தமாகவும் உருவெடுத்தது.

உயிர்க்கொலை கூடாது

என்பது கருத்தியலாக மட்டும் இருந்தது.

எனினும் #சமணர்கள்

புலால் மறுத்தலை வலியுறுத்தினர்.

ஆனால் #பெளத்தர்கள்

புலால் மறுத்தலை அவரவர்

விருப்பத்திற்கு விட்டு விட்டனர்.

பெளத்தன் ஒருவன்

பன்றிக்கறி உணவு

தந்து அதனை உண்ட

#புத்தர் உடல் நலிவுற்று

மாண்டார் என்பது வரலாறு.

எனினும் சமண

தீர்த்தங்கரர்கள், புத்தர் காலத்தில்

கடவுள் /உருவ வழிபாடு

என்பது முற்றிலும் தடுக்கப்பட்டது.

ஆனால், அவர்களின்

காலத்திற்குப் பின்னர்,

சமணத்தின் #தீர்த்தங்கரர்களும்,,,,,

பௌத்தத்தின் #புத்தரும்,,,,,

உருவம் பெற்றுக்

கடவுளர்களுக்கு

இணையானவர்களாக

வணங்கப்பட்டனர்.

மொத்தத்தில்,

உருவ வழிபாடு கூடாது

என்பதும் நீர்த்துப் போயிற்று.

இந்த நிலையில் #ஆரியம் உட்புகுந்தது.

#உருத்திரன்  #விஷ்ணு,

#பிரம்மன்  #இந்திரன் என்ற

கற்பனையாைன

கடவுள்களைப் புகுத்தினர்.

நாளடைவில்,,,,,,

#உருத்திரன் #சிவன் ஆனார்.

#விஷ்ணு #திருமால் ஆளார்.

#பிரம்மன் #பிராமணன் ஆனான்.

இவற்றையெல்லாம்

ஏற்கும்படி செய்ய, பல்வேறு

புராணங்களை இயற்றி ,

உருவ அமைப்புக் கொடுத்து,,,,.

அவ்வுருவங்களுக்கு என

வானளாவிய கோயில்களை

அரசர்களைக் கொண்டு

அமைத்தனர் #பார்ப்பனர்கள்.

அக் கடவுள்களின்

அருள் பெறத்

தாங்கள்தான் உதவ

முடியும் என்றும்,

கடவுளர்கள் தம்முள் அடக்கம்

என்றும்,,,,,,

தம்மை #உயர்குலத்தவர்

என்றும், மற்றவர்கள்

தங்களுக்குக் கீழ் இருந்து

சேவகம் செய்ய வேண்டிய

#சூத்திரர்கள் என்பது

ஆண்டவன் கட்டளை என்றும்

நம்ப வைத்தனர்.

இப்படித்தான் #பார்ப்பனியம்

நாட்டில் வேரூன்றியது.

அந்த வேர்களின் ஆணிவேரை

அடியோடு ஒழிக்க வேண்டும்,

என்பதற்காகவே #பெரியார்

தோன்றினார்.

அவர் உயிரோடிருந்த

காலம் வரை #பெரியாரியம் வளர்ந்தது.

ஆனால், அவரின் காலத்திற்குப்பின்,,,,

#ஆசீவகம்  #சமணம்

#பெளத்தம் போன்றே

#பெரியாரியமும் நீர்த்துப் போகத்

தொடங்கி விட்டது.

#பார்ப்பனீயம் ஒழிவதற்குத் தீர்வு என்ன???

ஆயிரம் பொன் கேள்வி !!!

விடை கூறி பார்ப்பனியத்திற்கு

விடை கொடுக்கும்

வரலாற்று நாயகன் எப்போது

தோன்றுவானோ யாரே அறிகுவர்?

 

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம. நடராசன்
[somanatarajan17@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

வே.வா.ப.து.ஓ.பெ.அ.இணையம்.

{தி.பி.2052, சுறவம் (தை) 12}

25-01-2021

-----------------------------------------------------------------------------------------------------

 

சிலம்பொலி சு.செல்லப்பன் !

 சிவியாம்பாளையச்  செந்தமிழன் !


சிலம்பொலி சி.சு. செல்லப்பனார் பிறந்த நாள் இன்று ,22 ஜனவரி !

-------------------------------------------------------------------------------------------------

சிலம்பொலி செல்லப்பன் என்று அறியப்பெற்ற நாமக்கல் மாவட்டம் 

சிவியாம்பாளையம் சுப்பராயன் செல்லப்பன் சிறந்த தமிழறிஞரும்

சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். நாமக்கல் 

மாவட்டம் சிவியாம்பாளையம் எனும் ஊரில்  சுப்பராயன் - 

பழனியம்மாள் இணையருக்கு மகனாக 22,டிசம்பர் 1929 –இல் 

பிறந்தவர் !

 

கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர் இவர் !


பின்னர் அவர் வகித்த பதவிகள் :

 

(01) .#மாவட்டக்கல்வி  அலுவலர்.

(02) .இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டு #உதவி அலுவலர் 1968.

(03) .தமிழ் வளர்ச்சித் துறை  இயக்குநர்

(04) .உலகத் தமிழாராய்ச்சி நிறுவன  இயக்குநர்

(05) .தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப்  பதிவாளர்.

(06) .தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைப்

        பரிந்துரைக்கும் குழுவின்  தலைவர் 1999.

 

இவர் தலைசிறந்த சொற்பொழிவாளர். கேட்டார்ப் பிணிக்கும் 

தகையைவாய், கேளாரும் வேட்ப மொழிகின்ற

ஆற்றொழுக்கான நடையில் இவரின் சொற்பொழிவுகள் 

அமைந்திருக்கும்.

 

சிலப்பதிகாரத்தில் துறைபோகிய ஆய்வுரை நல்குவார்.

இதைத் கண்டு இவருக்கு ,"சிலம்பொலி "என்ற பட்டத்தை

சொல்லின்செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை சூட்டினார்.

 

சிலம்பொலியார் சிறந்த எழுத்தாளரும் ஆவார்.*சிலம்பொலி,

பெருங்கதைஆராய்ச்சி, சங்க இலக்கியத்தேன் உட்படப் பல

நூல்களை எழுதியிருக்கிறார்.

 

இவர் எழுதிய நூல்களின் தொகுப்பு :-

 

(01). சிலம்பொலி (1975)

(02). சங்க இலக்கியத் தேன்

        (மூன்று தொகுதிகள், 1996)

(03). நல்ல குறுந்தொகையில் நானிலம், 1959.

(04). மூன்றும் நான்கும் (திரிகடுகம் ,

        நான்மணிக்கடிகை தெளிவுரை), 1980.

(05) இளங்கோ அடிகள் அருளிய

        சிலப்பதிகாரம் (மூலமும் தெளிவுரையும்), 1994.

(06) மணிமேகலை (மூலமும் தெளிவுரையும்), 1998.

(07) நாலடியார் (மூலமும் தெளிவுரையும்), 2000

(08) மலர் நீட்டம் (திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள்), 2003.

(09) சிலப்பதிகாரச் சிந்தனைகள், 2011.

(10) கணிதச் செல்வம் (எட்டு நூல்கள்), 1964-1966

(11) பாரதிதாசன் ஒர் உலகக் கவிஞர், 1983.

(12) வளரும் தமிழ், 1987.

(13) காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும், 1989 ( சென்னை , கம்பன்          கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு)

(14.) நெஞ்சை அள்ளும் சீறா (நான்கு தொகுதிகள்), 2004.

(15) .இலக்கியச் சிந்தனைகள், 2004.

(16) .பெருங்கதை ஆராய்ச்சி, 2006

(17) .இக்காலத் தமிழ்க் காப்பியங்கள், 2004.

(18) .இலக்கியம் ஒரு பூக்காடு, 2004.

(19) .பூங்காவில் புதுமணம், 2009.

(20) .இசுலாமிய இலக்கியச் சாரல், 2011.

(21) .நான் ஒரு தும்பி, 2004.

(22) .திருக்குறள் இன்பத்துப்பால் (மூலமும் உரையும்), 2015.

(23) .பெருங்குணத்துக் கண்ணகி, 2008.

(24).செம்மொழித்தமிழ் அகப்பொருள் களஞ்சியம்: (14 தொகுதிகள்)

       2016.

(25).சிலம்பொலியார் பார்வையில் #முத்தமிழ் #அறிஞர் #கலைஞர்

     , 2008.

 

இவர் பெற்ற பட்டங்களும் விருதுகளும் :-

 

(01). சிலம்பொலி பட்டம் (1954 இல் இரா. பி. சேதுப்பிள்ளை வழங்கியது)

(02). #பாவேந்தர் #பாரதிதாசன் விருது

(03) .சிலம்பொலியாரின் அணிந்துரைகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித்

        துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு

        எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

(04) .கம்பன் புகழ் விருது, 2013 இல் வழங்கப்பட்டது.

 

தமிழ் நாட்டரசின் கலைமாமணி விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.

வாழ்நாளெல்லாம் தமிழுக்காக , தமிழாய் வாழ்ந்த இவர் தனது 90-

ஆம் அகவையில் 6-4- 2019 இல் தமிழுடன் கலந்தார் !

 

வாழ்க ! வளர்க ! சிலம்பொலி செல்லப்பனார் புகழ் !

 

------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை

சோம. நடராசன்

(somanatarajan17@gmail.com)

கூடுதல் ஆட்சியர்,

வே.வா..து..பெ..இணையம்.

[தி.பி.2052,சுறவம் (தை0 09]

{22-01-2021}
------------------------------------------------------------------------------------------------