name='description'/> தமிழ்க்கனி
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

வெள்ளி, 22 ஜனவரி, 2021

உலகுக்கு உயிரூட்டும் உழவுத் தொழிலின் மேன்மை !

 

உழவர்கள்  உரிமைப் போராட்டம்   !


பாழ் என்ற நிலத்தில் வாழ்வைப்

பயிரிட்ட உழவன்

= அழகின் சிரிப்பு/#பாவேந்தர் !

 

 

"பாழ் என்ற நிலத்தில் வாழ்வைப்

பயிரிட்ட #உழவன் நீ | "

எவ்வளவு பொருள்பொதிந்த சொல்லாட்சி !

 

 

#வாழ்வையே_பயிரிட்ட_உழவன் என்று

இதைக் கதிரவன் மேல் ஏற்றிச்

சொல்லுகிறார்

பாவேந்தர் !

 

 

உண்மையில் இச்சொல்லாட்சி

உழவனுக்கே பொருந்தும்

என்றால் மிகையாகாது.

ஒவ்வொரு உழவனும்

உடல் பொருள் ,சுற்றம், எல்லாவற்றையும்

பயிர்த்தொழிலில் புக வைத்து

மண்ணை உழுது தன்

வாழ்க்கையையே அர்ப்பணித்துவிடுகிறான் !

 

 

எந்தத் தொழிலிலும்

ஒரு ஒளிவு, மறைவு, பித்தலாட்டம்

எல்லாம் இருக்கிறது.

ஆனால் உழவுத் தொழிலில்

எந்தவகையான  ஒளிவோ, மறைவோ,

பித்தலாட்டமோ செய்ய இயலாது !

 

 

பருவத்தே பயிர்செய்ய வேண்டும் .

இல்லாவிட்டால் , உழவுத் தொழில்

நாசமாகிப் போய்விடும் !

 

 

உணவின்றி உலகமே ஒழிந்துவிடும்.

எனவேதான் "சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்"

என்றார் உலகப் #பேராசான்,

உழவும், உண்மை உழைப்பும்

#இரட்டைக் கிளவிகள்.

பிரித்துப் பார்த்தால் பொருளே இருக்காது.

பூவுலகமும் இருக்காது !

 

 

ஆளும் அராஜக அரசு அதைச் செய்ய

முனைகிறது. அதற்குத்துணை போகிறது

அடிமைகள் அரசு !

 

 

இந்த ஆணவ அராஜக .

அரசுகள் திருந்த வேண்டும்.

இல்லையேல் திருத்தப்பட வேண்டும்.

மன்பதை வாழ வேண்டும்.

தவறினால் நாடு சுடுகாடாகிப் போகும் !

 

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம. நடராசன்,

(somanatarasjan17@gmail.com)

கூடுதல் ஆட்சியர்,

வே.வா.ப.து.ஓ.பெ.அ.இணையம்

{01-01-2021}

------------------------------------------------------------------------------------------------------