பாவேந்தர் பாரதிதாசனார் மகன், மாமனிதர் ,
மன்னர்_மன்னன்
என்கிற கோபதி
அவர்கள்
நினைவு நாள் இன்று ஜூலை 6 , (மறைவு 6.7.2020)
பாவேந்தர்பாரதிதாசனின் மக்கள்
நால்வரில்
ஒரே மகன், மன்னர்மன்னன் !
மற்ற மூவரும் பெண்மக்கள்.பேச்சாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர்,
தமிழ்,,ஆங்கிலம், பிரெஞ்சு, மற்றும் தெலுங்கு எனப்
பன்மொழி
அறிந்த பன்மொழிப் புலவர் !
இதழாசிரியர், வானொலி நிலைய
எழுத்தாளர் , நிகழ்ச்சித்
தயாரிப்பாளர் என
ஊடகத்துறையிலும்
முத்திரை பதித்தவர்
புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணியாற்றிய
காலத்தில், பல்வேறு
நாடகங்களை தயாரித்து அளித்துள்ளார்.
இவர் 50க்கும் மேற்பட்ட
நூல்களைஎழுதிய
தமிழறிஞரும் ஆவார்.
புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் தலைவராக இருந்துள்ள இவர்,
தமிழ்ச்சங்கத்திற்குச்
சொந்தமாகக் கட்டடம்
கட்டித்தந்தவர்
!
தமிழக அரசின் உயரிய விருதுகளான திரு.வி.க விருது, கலைமாமணி
விருது, புதுச்சேரி
அரசின் தமிழ்மாமணி,
கலைமாமணி விருது உள்ளிட்ட பல
விருதுகள் பெற்றவர்
மன்னர்மன்னன் !
இவரது தந்தை 'புரட்சிப்
பாவேந்தர்'
பாரதிதாசனாரின் வாழ்க்கை
வரலாற்றைக்.
கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல்"
என்ற தலைப்பில்
எழுதியவர் மன்னர் மன்னன் !
இது தமிழக அரசின்
சிறந்த நூலுக்கான பரிசையும்
பெற்றுள்ளது.
தமது 14 அகவையிலேயே"
முரசு" என்ற
புரட்சிகர ஏட்டை நடத்தியமைக்காகப்
பிரஞ்சிந்திய அரசின் தேசத்துரோக
வழக்கை எதிர்கொண்டவர் !
இந்திய விடுதலைப் போராட்டம்
மட்டுமின்றி,
மொழிப் போராட்டத்திலும் பங்கேற்றுச்
சிறை
சென்றவர் இவர் !
தமிழறிஞர்கள்
பலருடன் தொடர்பு கொண்டு
தமிழ்ப் பணியாற்றியவர்
மன்னர்மன்னன் !
இவர் அரசியல்
அரங்கிலும் , பெருந்தலைவர் காமராசர், பெரியார்,
பேரறிஞர்அண்ணா, கலைஞர்கருணாநிதி,
எம்.ஜி ஆர் போன்றவர்களுடன்
நெருங்கிப் பழகியவர் !
கலைஞர்
ஆட்சிக் காலத்தில்தான்
பாவேந்தரின்_படைப்புகள்
அரசுடைமை
ஆக்கப்பட்டன !
இவரின் துணைவி
35 ஆண்டுகளுக்கு
முன்பே
காலமாகிவிட்டார் !
திருவாளர்கள் செல்வம், பாரதி,
தென்னவன்
மற்றும் திருமதி அமுதவல்லி
ஆகியோர் இவரின்
மக்கட்செல்வங்கள் !
வாழ்நாள் முழுதும் தமிழுக்குத்
தொண்டு செய்த
மாமனிதர் மன்னார் மன்னன்
தமது 92 ஆம்
அகவையில் 6 - 7 - 2020இல்
தமிழுடன் கலந்தார் !
இவருக்கு இதுவரை சாகித்திய_அகாடமி
பரிசு
வழங்காமல் தன் பெருமையை இழந்து
நிற்கிறது.
இனியாவது இவரின் தமிழ்ப்
படைப்புகளுக்குச்
சாகித்தியஅகடமி பரிசு
வழங்கிப்
பெருமைப்பட வேண்டும் !
இவரின் படைப்புகள்
அனைத்தும்
தமிழ்நாட்டரசினால் நாட்டுடைமை
ஆக்கப்பட
வேண்டும் !
இவருக்குப் புதுவையில் நினைவாலயம்
அமைக்கப்பட வேண்டும்....என்பவை
தமிழார்வலர்களின் வேண்டுகோள் !
--------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
ஆட்சியர்,
”துலாக்கோல்” முகநூல்.
[தி.ஆ:2052,ஆடவை (ஆனி) 22]
{06-07-2021
----------------------------------------------------------------------------------------------------