"தத்தகாரம்" என்பது
இசையமைப்பிற்கே உரிய
உத்தி.
அதைத் தமிழ்ப்பாட்டாகவே
மாற்றிய
#கவிகாளமேகத்தின்
புலமை வியப்பிற்குரியது !
இதோ அந்தப் பாடல்:-
தத்தித்தா தூதித் தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி
துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தத்த தாதெது
தித்தித்த
தெத்தாதோ தித்தித்த
தாது?
இதன் பொருள்:
வண்டே, நீ
சுற்றிச்சென்று, மகரந்தத்தை
ஊதுகின்றாய்......
மகரந்தத்தை ஊதிய
பின்னர்ப் பாய்ந்து செல்கின்றாய்......
"து
" "தி" என்று ஒலியெழுப்பி மலர்களை
அணுகுகின்றாய்.....
மிகமிக இனிமையான மலர்
எது?
இனிமையுடையது எந்த
மலரினது மகரந்தம்?
அழகான மலர் இதழ் எது?
(கூறுவாயாக).
"கொங்குதேர்
வாழ்க்கை அரசிறைத் தும்பி...."
என்ற #குறுந்தொகை
இறையனார் பாடலின்
தாக்கம் இச் செய்யுளில்
இருக்கிறது என்பதும்
ஒப்புநோக்கத்தக்கது !
இத்தகைய, புரிந்துகொள்ளக்
கடுமையான
பாடலைப் பாடிய
கவிகாளமேகம்,
மிக
எளிமையான பாடலையும்
பாடியிருக்கிறார்,
அவற்றுள் ஒன்றினைப்
பார்ப்போம்
!
இவரை, #அதிமதுரகவிராயர்
என்பவர்,
"உம் பெயர் யாது?
நினைத்த மாத்திரத்தில்
உம்மால் பாக்கள் இயற்ற
இயலுமா?" என்று
அங்கதமாகக் கேட்டார் !
இதைக்கேட்ட
மாத்திரத்தில்,
காளமேகம்
இந்தப்
பாடலைப்பாடினாராம் !
"இம்மென்னும்
முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம்மென்னு முன்னே
ஆயிரம்பாட் டாகாதோ - சும்மா
இருந்தால் இருப்பேன்
எழுந்தேனே யாயின்
பெருங்கா ளமேகம் பிளாய்"
இப்படிப் பாடி
அயரவைத்து
விட்டார் என்பார்கள்.
எனவே நினைத்த
மாத்திரத்தில் கவிபாட
வல்ல இவர் #ஆசுகவி
என்றும்
போற்றப்பட்டார் !
புரிந்துகொள்ளக்
கடினமாக
கவிதையை
யாத்துள்ள இவர் தான்.
மிக எளிதான கவிதையையும்
யாப்பமைதியுடன்
எழுதியுள்ளார்
!
இத்தகைய
புலமைமிக்கவர்கள்
தற்போது
அருகிவருகிறார்கள்.
புதுக்கவிதை என்ற
பெயரில்
வெறும்
சொற்சிலம்பமாடும்
#கம்பாசிட்டர்
கவிதை இயற்றுபவர்களே
பெருகிவருகின்றனர் !
அவற்றைக் கவிதை
நூல்களாகவும்
வெளிக்கொணர்கின்றனர்.
அச்சிட்ட இரண்டு கவிதை
நூல்களை
சான்றாகக் காட்டி,
தங்களின் கட்சிச்
சார்புடைமையையும்
பயன்படுத்தி, அதைச்
சாக்கிட்டு
தமிழ்நாட்டரசின்
"# #தமிழ்ச்_செம்மல்"
விருதுகளையும் "#வாங்கிவிடுகிறனர்"
?!
ஆனால், யாப்புமுறைப்படி
கவிதைகள் யாத்தும்
......
ஏராளமான
புதுப்புதுச்சொற்களைத்
தமிழுக்குத் தந்தும்.....
மெய்யான
தமிழ்ச் செம்மல்களாக
இன்றும்
நம்மையெல்லாம்
மகிழ்வித்துக்கொண்டிருக்கும்
கவிஞர் பெருமக்கள், தமிழறிஞர்
பெருமக்கள்
கவனிக்கப்படாமலே
உள்ளனர் !
எனினும் அவர்களைப்
போற்றுவதும்
பாராட்டி
மகிழ்விப்பதும் நம் கடமை !
----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
சோம.நடராசன்
ஆட்சியர்
”துலாக்கோல்” முகநூல்
[தி.பி.2052: கும்பம் (மாசி) 09]
21-02-2021
----------------------------------------------------------------------------------------------------