துரோபதையை மூக்கரிந்ததல்லவா மாபாரதம் !
♦️♦️♦️♦️♦️
காலம் 10 ஆம் நூற்றாண்டு.
மன்னர் #விக்கிரமசோழர் அரசவை.
அரசர் ஒரு வரியைக்கூறுகிறார் :
வாலி திரௌபதையை
மூக்கரிந்ததல்லவோ மாபாரதம்*"
இது தவறல்ல; உண்மைப்
பொருள்தரும் வரிதான் !
ஆகவே புலவர் கூட்டம்
இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் அது எப்படி சரி
என்று விளக்க வேண்டும் ! "
புலவர் கூட்டம் திகைத்து நின்றது !.
ஓர் இளைஞர் எழுந்துநின்றார்.
" அரசர் பெருமானே ,
புலவர் பெருமக்களே
வணங்குகிறேன் !
"அரசர் பெருமான் கூற்று
உண்மைதான்” என்று
ஒரு வெண்பாவைக் கூறினார்
இளம் புலவர் !
"புள்ளிருக்கும் தார்மார்பன் பூம்புகார் வாழ்களியேம்
சுள்ளிருக்கும் கள்ளையுண்டும் சோர்விலேம் - உள்ளபடி
சொல்லவா வாலிது ரோபதையை மூக்கரிந்த
தல்லவா மாபா ரதம்?''
இதைக்கேட்ட மன்னர்
விக்கிரம சோழன்
பெருமகிழ்ச்சியடைந்தார் !
"நன்று புலவரே. நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் இங்குள்ள பிற புலவர் பெருமக்கள்
பொருள் புரியமல் திகைத்து நிற்கின்றனர்.
அவரகளுக்கு விளக்குங்கள்" என்றார்.
இளம்புலவர் விளக்கினார் !
"*சிற்றிலக்கிய வகைகளில்
"கலம்பகம்"
என்பதும் ஒன்று.
கலம்பகத்தின் ஒரு கூறு "களி".
கற்றறிந்தவர்கள் கள்ளைக்
குடித்து மயங்கினாலும் ,
தம்முடைய புலமைச்
செருக்கை இழக்க
மாட்டார்கள் !
ஆனால், சில நிகழ்வுகளைக்
கேட்பவர் மயக்குறும் வகையில் வெளிப்படுத்துவார்கள் !
"அந்த வகையில் அமைந்ததுதான்
நான்கூறிய வெண்பா”.
"இதில் மன்னர் இயம்பிய கடைசி
வரியில் கூறப்பட்ட செய்தி நிகழ்ந்த
நேர்வை விரித்துக் கூறியுள்ளேன்."
என்றார் இளம்புலவர் !
"சரி உம் வெண்பாவின்
பொருளை விளக்கமாகக் கூறுங்கள்"
என்றார் மன்னர் !
இளம்புலவர் தொடர்ந்தார் !
"வாலி என்பது வால்த்தனம் மிக்க
#துச்சாதனனைக் குறிக்கும்.
"#மூக்கரிதல் என்பது
திரௌபதியைத் துகிலுரிந்து அவமானப்படுத்தியதைக்
குறிக்கின்ற பொருள்தரும்.
இந்நிகழ்வு #மகாபாரதத்தில் நிகழ்ந்தது !
"ஆனால் வாலி என்ற பாத்திரமும்,
சூர்பனகையின் "மூக்கரிதல்" என்கிற
நிகழ்வும் #இராமாயணம்
கூறும் செய்தி !
"இப்படிச் சிற்றிலக்கிய வகையில் ஓர்
உறுப்பான "கலம்பகத்தில் களி"க்கு
ஏற்றவகையில் பொருள் மயக்கம்
தரும்வகையில் கவிபாடுவது கள்குடித்த
புலமைமிக்கோருக்குக்
கைவந்த கலை !
"கள்ளைக் குடித்தாலும் தங்களின
புலமையை இழக்காதவர்களாகப்
புலவர் கூட்டம் இருப்பதை
வெளிப்படுத்தும் செய்தியைத்தான்
நான் இவ்வெண்பாவில்
கூறியுள்ளேன்." என்றார் இளம் புலவர் !
இதனைக் கேட்ட அரசன் உள்ளிட்ட
அவையோர் பெருவியப்பில்
ஆழ்ந்து மகிழ்ச்சி பொங்கப்
பாராட்டினர் !
மன்னர் விக்கிரமசோழர்
"புலவரே ! இன்று முதல்
தாங்கள்தான் இப்புலவர்
கூட்டத்தின் முதன்மைப்
புலவர் ” !
”என் அரசவையின் அவைக்களப்
புலவராகவும் அரச பரம்பரைக்கு
நீங்களே கல்வி
போதிக்கும் #ஆசானும் ஆக
இருக்க வேண்டும்”
என்று கூறி வரவேற்றார் !
அந்தப் புலவர்தான் #கவிச்சக்கரவர்த்தி ,
#கௌடப்புலவர், #கவிராட்சசன் என்று
அறியப்பெற்ற #ஒட்டக்கூத்தர் பெருமான்.
♦️♦️♦️♦️♦️
-------------------------------------------------------------------------------------------------------------